காலிங் பெல் அடிக்கிறார், எட்டிப் பார்க்கிறார்... 2வது கணவர் மீது நடிகை சுருதி புகார்
பெங்களூர்: கன்னட திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுருதி. தமிழிலில் கல்கி, குமரேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
கன்னட இயக்குநர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகள் வாழ்க்கை நடத்திய இருவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மகேந்தரை விவாகரத்து செய்த நடிகை ஸ்ருதி, கடந்த ஆண்டு கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் கன்னட பத்திரிகையாளர் சந்திரசூட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நீதிமன்றத்தில் மனு
இது குறித்து ஊடகங்கள் மூலமாக தெரியவந்ததும், அதிர்ச்சி அடைந்த சந்திரசூட் மனைவி மஞ்சுளா, இருவரின் திருமணத்தை ரத்து செய்யுமாறு பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

திருமணத்தை ரத்து செய்ய கோரிக்கை
முதல் திருமணத்தை விவாகரத்து செய்யாமல் நடிகை ஸ்ருதியுடன் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார் சந்திசூட் என்று குற்றம்சாட்டிய மஞ்சுளா, இந்த திருமணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

சுருதி திடீர் பல்டி
இந்நிலையில் நடிகை ஸ்ருதியும் மஞ்சுளாவுக்கு திடீரென ஆதரவு கரம் நீட்டினார். விவாகரத்து வாங்கிவிட்டதாக ஏமாற்றி தன்னை சந்திரசூட் திருமணம் செய்துவிட்டதாக சுருதியும் குற்றம்சாட்டினர். எனவே சுருதி-சந்திரசூட் திருமணத்தை குடும்ப நல நீதிமன்றம், ரத்து செய்து உத்தரவிட்டது.

மீண்டும் தொல்லை
இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் சுருதி கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், சந்திரசூட் சுருதியை தொல்லை செய்துவருவதாக கூறப்படுகிறது.

காலிங் பெல், கதவு துவாரம்..
பெங்களூரின் பசவேஸ்வரநகர் பகுதியிலுள்ள சுருதியின் வீட்டுக்கு இரவு 11.15 மணியளவில் சென்ற சந்திரசூட் அவரது வீட்டு காலிங் பெல்லை தொடர்ந்து அழுத்தி தொல்லை கொடுத்ததாகவும், சாவி துவாரத்தின்வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்ப்பதாகவும் சுருதி பெங்களூர் மாஜிட்ரேட் கோர்ட்டில் புகார் செய்தார்.

ரகசிய கேமராவில் அம்பலம்
இதனிடையே சுருதியின் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான சந்திரசூட்டின் நடவடிக்கைகள் ஊடகங்களில் கசிந்துள்ளன. அந்த காட்சிகளில், சுருதி புகாரில் தெரிவித்ததை போலவே சந்திரசூட் நடவடிக்கைகள் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











