கொல்லூர் கோவிலில் 'கல்கி' ஸ்ருதிக்கு 2வது திருமணம்
பெங்களூர்: கன்னட நடிகை ஸ்ருதி தனது காதலர் சந்திரசுட்டை இன்று கொல்லூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
கன்னட நடிகை ஸ்ருதி தமிழக ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். அவர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஹ்மான் ஜோடியாக கல்கி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
அதன் பிறகு அவர் கோலிவுட் பக்கம் தலையைக் காண்பிக்கவே இல்லை. ஆனால் ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். கன்னட இயக்குனர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்ற அவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார். அவர் விருப்பப்படி விவாகரத்தும் பெற்றார்.

சந்திரசுட்டுடன் காதல்
விவாகரத்துக்கு பிறகு பத்திரிக்கையாளராக இருந்து கன்னட இயக்குனரான சந்திரசுட்டுன் ஸ்ருதிக்கு காதல் ஏற்பட்டது.

கொல்லூர் கோவிலில் திருமணம்
காதலனை பிரபல கொல்லூர் கோவிலில் வைத்து ஸ்ருதி இன்று திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திகை பெண்கள்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை பெண்கள் தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











