அதிர்ச்சி.. வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இளம் நடிகை.. பெரும் சோகத்தில் திரையுலகம்!

பெங்களூரு: வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து பிரபலமான இளம் நடிகை செளஜன்யா தனது அடுக்குமாடி குடியிருப்பிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இளம் வயதிலேயே நடிகர்கள் மற்றும் நடிகைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.

நடிகை செளஜன்யாவின் தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்

இளம் நடிகை தற்கொலை

இளம் நடிகை தற்கொலை

கன்னட திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை செளஜன்யா பெங்களூருவின் கும்பல்கோடுவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்து வீட்டார் போலீசாருக்கு கொடுத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்த நிலையில், நடிகை செளஜன்யா கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

டாட்டூவை வைத்து

டாட்டூவை வைத்து

தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது நடிகை செளஜன்யா தான் என்பதை நடிகையின் காலில் குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து போலீசார் உறுதி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாகவே அவர் இறந்திருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

தற்கொலை கடிதம்

தற்கொலை கடிதம்

நடிகை செளஜன்யாவின் அறையில் சோதனை நடத்திய போலீசாருக்கு அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதில், தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தற்கொலை முடிவை தான் மட்டுமே எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பெற்றோர்களிடமும் இந்த முடிவை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மன அழுத்தம்

மன அழுத்தம்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் பல இளம் நடிகர்கள் தற்கொலைக்கு காரணமாக சொல்லப்படும் அதே மன அழுத்த பிரச்சனை தான் தனது தற்கொலைக்கும் காரணம் என செளஜன்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு எந்தவொரு நோயும் இல்லை என்றும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சோகத்தில் சாண்டில்வுட்

சோகத்தில் சாண்டில்வுட்

இளம் நடிகை செளஜன்யா இப்படி திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது பற்றி அறிந்த கன்னட திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர் மரணம்

பிக் பாஸ் போட்டியாளர் மரணம்

இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி பிக் பாஸ் கன்னட போட்டியாளரான ஜெயஸ்ரீ ராமைய்யா பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த இளம் நடிகையின் தற்கொலை சாண்டில்வுட்டை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

தற்கொலை செய்து கொண்டு இறந்து போன நடிகை செளஜன்யாவின் குடும்பம், உறவினர் மற்றும் சக நடிகர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள் உள்ளனர். ராஜேஷ்வரி மருத்துவ கல்லூரிக்கு அவரது உடல் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X