இயக்குநரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை விஜயலட்சுமி.. பெற்றோர் கொலை மிரட்டல்.. போலீஸில் தஞ்சம்!

பெங்களூரு: பிரபல கன்னட நடிகை விஜயலட்சுமி தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து முடித்துள்ளார்.

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை விஜயலட்சுமி. இவர் கன்னட திரையுலகில் இதுவரை 16க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1997ஆம் ஆண்டு சிறந்த கன்னட நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றுள்ளார் விஜயலட்சுமி. தற்போதும் சினிமாவில் பிஸியிக நடித்து வருகிறார் விஜயலக்ஷ்மி.

தீவிர காதல்

தீவிர காதல்

இந்நிலையில் துங்கபத்ரா இயக்குநர் ஆஞ்சநேயா மீது விஜயலட்சுமி காதல் கொண்டார். இருவரும் நீண்ட நாட்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

ஆனால் விஜயலட்சுமியின் காதலை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜயலட்சுமி தனது காதலரான இயக்குநர் ஆஞ்சநேயாவை ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இவர்கள் ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடிகை விஜயலட்சுமி தனது கணவருடன் புகார் அளித்துள்ளார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

அதாவது, தன்னுடைய திருமணத்தில் தனது பெற்றோருக்கு விருப்பமில்லை என்பதால் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தனக்கும் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் பொய்

குற்றச்சாட்டுகள் பொய்

மேலும் தான் வீட்டில் இருந்து எந்த பணத்தையும் எடுத்து வரவில்லை என்றும் எந்த இயக்குநரின் வங்கிக்கணக்கிலும் டெப்பாசிட் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் நடிகை விஜயலட்சுமி தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இதனை தொடர்ந்து விஜயலட்சுமி மற்றும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியின் தாயாரும் அவரது பாட்டியும் இயக்குநர் ஆஞ்சநேயாவின் குடும்பத்தினர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்து

உயிருக்கு ஆபத்து

மாண்டியா மாவட்ட காவல் நிலையத்தில் அவர்கள் அளித்துள்ள புகாரில், இயக்குநர் ஆஞ்சநேயா மற்றும் அவரது குடும்பத்தினரால் விஜயலட்சுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X