ஓராண்டாக பாலியல் துன்புறுத்தல்.. நடிகை அளித்த புகார்.. சீரியல் நடிகர் கைது!

சென்னை: கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகரான சரித் பாலப்பா, பிராந்திய, முத்துலட்சுமி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் மீது 29 வயதே ஆன நடிகை பாலியல் துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, போலீசார், அந்த நடிகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அந்த நடிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், கடந்த ஆண்டு நவம்பர் 1ந் தேதி முதல் இந்த ஆண்டு டிசம்பர் 13ந் தேதி வரை ஒரு வருடம் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. தெலுங்கு மற்றும் கன்னடத் தொடர்களில் நடித்து வரும் நடிகை, பாலப்பாவை 2017 ஆம் ஆண்டில் சந்தித்துள்ளார். இருவரும் தொழில் ரீதியாக பல இடத்தில் சந்தித்துக்கொண்டதைத் தொடர்ந்து, பாலப்பா நடிகையை மிரட்டி வற்புறுத்தி உடல் உறவு வைத்துக்கொண்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், புகார் தாரர் தனியாக வசித்து வருவதை தெரிந்து கொண்ட நடிகர் பாலப்பா, ஒருமுறை தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்குள் புகுந்து, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக நடிகை புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து அவர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

arrest

பல பிரிவுகளில் வழக்கு: மேலும், பாலப்பா அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர்களின் அந்தரங்க போட்டோக்களை மற்ற நடிகர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் நடிகை கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தன்னை மிரட்டுவதற்காக அரசியல்வாதிகள், ரவுடிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நபர்களுடனான தொடர்புகளைப் பயன்படுத்தியதாக அந்த நடிகை புகார் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, மனரீதியாக துன்புறுத்தல், உடல் ரீதியாக தாக்கியது, கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X