பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளது.
இந்தி மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெறும் வெற்றி பெறவே அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்தியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 13வது சீசனை எட்டியுள்ளது.
ஒவ்வொரு மொழியிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஏதாவது ஒரு சர்ச்சையை சந்தித்து வருகிறது. இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி காதலை கடந்து காமம் வரை சென்றுவிட்டதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

ஆரவ் - ஓவியா
தமிழில் 3வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. தமிழில் முதல் சீசனிலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் மலர்ந்தது. பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களான ஓவியா ஆரவை காதலித்தார். அந்த சீசனில் தான் மருத்துவ முத்தம் அறிமுகமானது.

மகத் - யாஷிகா ஆனந்த்
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற போட்டியாளர்களான மகத்தும் யாஷிகா ஆனந்தும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். மகத்துக்கு வெளியில் காதலி இருந்தபோதும் அவர் யாஷிகாவின் காதலை ஏற்று இருவரும் காதலிக்க தொடங்கினர்.

பஞ்சமே இல்லை
அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3யில் காதலுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. முதல் காதல், இரண்டாம் காதல், முக்கோண காதல் என வகை வகையாக இருந்தது. முதலில் அபிராமி கவினை காதலித்தார். அபிராமியின் காதலை கவின் ஏற்காததால் முகெனை ஒருதலையாக காதலித்தார் அபிராமி.

கவின் - லாஸ்லியா
பின்னர் சாக்ஷியும் கவினும் காதலித்தனர். இதனை தொடர்ந்து லாஸ்லியா கவினை காதலித்தார். இதனால் சாக்ஷியை கழட்டிவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார் காதல். அதே நேரத்தில் தர்ஷன் மீது ஷெரினுக்கு சாஃப்ட் கார்னர் இருந்தது.

கைக்கூடிய காதல்
இப்படி பார்ப்பவர்களும் கேட்பவர்களும் கன்ஃபியூஸ் ஆகும் வகையில் பிக்பாஸ் வீட்டில் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் இப்படியாக காதலித்த ஒரு இளம் ஜோடியின் காதல் கைக்கூடியுள்ளது,
காதலாக மாறியது
அதாவது கன்னடத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட பிரபல இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டிக்கும் அதே சீசனில் பங்கேற்ற நிவேதா கவுடாவுக்கும் இடையே பிக்பாஸ் வீட்டில் நல்ல ஒரு நட்பு மலர்ந்தது. இந்த நட்பு வெளியே வந்த பிறகு காதலாக மாறியது.

நிச்சயதார்த்தம்
இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைக்கொடி காட்ட நிச்சயதார்த்தம் வரை வந்துள்ளது காதல். மைசூரில் இருவீட்டார் முன்னிலையில் பிரபலங்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
விரைவில் திருமணம்
தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். நிச்சயதார்த்தத்தை அடுத்து விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது?
கன்னட பிக்பாஸின் காதல் ஜோடிகள் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தமிழ் பிக்பாஸின் காதல் ஜோடிகளான கவினும் லாஸ்லியாவும் எப்போது தங்களின் திருமண அறிவிப்பை வெளியிட போகிறீர்கள் என கேட்டு வருகின்றனர். ஆனால் கவினும் லாஸ்லியாவும் தங்களின் காதல் குறித்து கூட வாய்த்திறக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











