உடல் எடையை அதிகமாகக் குறைத்ததால் பிரச்னையா? பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
பெங்களூரு: பிரபல காமெடி நடிகர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல கன்னட காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ். கன்னட சினிமாவில் உடல்மொழிக்காக பாராட்டப்பட்டவர்.
சுமார், 300 -க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் புல்லட் பிரகாஷ் நடித்துள்ளார்.

காமெடி காட்சிகள்
எப்போதும் புல்லட்டில் வருவதை வழக்கமாக வைத்திருப்பதால் புல்லட் பிரகாஷ் என்ற பெயரை பெற்றார். பிறகு அதுவே அவருக்கு நிரந்தரமாகி விட்டது. பல்வேறு படங்களில் இவரது காமெடி காட்சிகள் பேசப்பட்டன. ஜாக்கி, பாம்பே மிட்டாய், பீஷ்மா, மஸ்த் மஜா மாடி உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
முன்னணி ஹீரோக்களான புனித் ராஜ்குமார், தர்ஷன், சிவராஜ்குமார், சுதீப் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கிறார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இரண்டாவது செஷனில் இவர் பங்கு பெற்றிருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இவர், கடந்த தேர்தலில் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

உடல் எடை குறைப்பு
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த புல்லட் பிரகாஷ், கடந்த கடந்த 5 மாதத்தில் தனது உடல் எடையில் சுமார் 35 கிலோ வரை குறைத்துள்ளார். இதனால் அவர் உடல்நிலையில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை
இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்டிலேட்டர் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதை கேள்விபட்ட சக நடிகர், நடிகைகள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











