கல்லீரல் பிரச்னை.. சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் திடீர் பலி... திரையுலகம் அதிர்ச்சி!

By

பெங்களூரு: கல்லீரல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் திடீரென உயிரிழந்தார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல கன்னட காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ். கன்னட சினிமாவில், உடல்மொழிக்காக அதிகம் பேசப்பட்டவர்.

சுமார், 300 -க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் இவர், நடித்துள்ளார். சில தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

காமெடி காட்சிகள்

காமெடி காட்சிகள்

எப்போதும் புல்லட்டில் வருவதை வழக்கமாக வைத்திருந்ததால் புல்லட் பிரகாஷ் என்ற பெயரை பெற்றார். பிறகு அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகி விட்டது. பல்வேறு படங்களில் இவரது காமெடி காட்சிகள் பேசப்பட்டன. ஜாக்கி, பாம்பே மிட்டாய், பீஷ்மா, மஸ்த் மஜா மாடி உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

முன்னணி ஹீரோக்களான புனித் ராஜ்குமார், தர்ஷன், சிவராஜ்குமார், சுதீப் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கிறார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இரண்டாவது செஷனில் இவர் பங்கு பெற்றிருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இவர், கடந்த தேர்தலில் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த புல்லட் பிரகாஷ், கடந்த 5 மாதத்தில் தனது உடல் எடையில் சுமார் 35 கிலோ வரை குறைத்துள்ளார். இதனால் அவர் உடல்நிலையில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதை கேள்விபட்ட அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 44.

நேரில் அஞ்சலி

நேரில் அஞ்சலி

இதையடுத்து பிரபல ஹீரோ 'துனியா' விஜய், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஏராளமான கன்னட திரையுலகினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா காரணமாக யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை இருப்பதால், அவருக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X