வலுவாக இருக்கிறேன்.. அடுத்த கணமே நொறுங்கி போகிறேன்.. நடிகர் சிரு குறித்து பிரபல இயக்குநர் உருக்கம்!
சென்னை: மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா குறித்து கன்னட சினிமாவின் பிரபல இயக்குநரும் அவரது நெருங்கிய நண்பருமான பண்ணக பரனா இன்ஸ்டாவில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
39 வயதான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிற்றுக்கிழமை கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது திடீர் மரணத்தால் கன்னடம் மட்டுமின்றி தமிழ் திரைத்துறையும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அவரது மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த பலரும் தற்போது மெல்ல தங்களின் வலியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல கன்னட சினிமா இயக்குநரும் சிரஞ்சீவியின் நண்பருமான பண்ணக பரனா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

என்ன செய்கிறேன்..
தனது இன்ஸ்டா பக்கத்தில் சிருவுடன் எடுத்த செல்பியை ஷேர் செய்துள்ளார். அதோடு தெரிவித்திருப்பதாவது, நான் டைப் செய்கிறேன் பின்னர் டெலிட் செய்கிறேன். இதையே திரும்ப திரும்ப செய்கிறேன். ஏனெனில் நான் எப்படி இருக்கிறேன் என்பதை எனக்கு வெளிப்படுத்த தெரியவில்லை.

நொறுங்கி போகிறேன்
சில நேரங்களில் வலுவாக இருக்கிறேன். அடுத்த கணமே உடைந்து நொறுங்கி போகிறேன். எதைச் செய்வது சரியென்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழைவதை பற்றி நான் புகார் செய்வதா அல்லது இந்த பூமியை விட்டு செல்வதை பார்த்து துக்கத்தில் மூழ்குவதா என எனக்கு தெரியவில்லை.

எதார்த்தத்தை எதிர்க்கிறேன்
எனக்கு தெரிந்தது எல்லாம் கலவையான உணர்வுகள்தான் எனக்குள் உள்ளது. எதார்த்தத்தை எதிர்த்து போரிடுகிறேன் அதே நேரத்தில் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். நான் உங்களுடன் சிறந்த மற்றும் மிகச் சிறந்த நினைவுகளை வைத்திருக்கிறேன், அதோடு தான் நான் வாழ விரும்புகிறேன்...

இப்படி அழுததில்லை
இரவு முழுவதும் நாம் சிரித்துக் கொண்டிருந்த அந்த கடைசி பயணத்தை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் இவ்வளவு சிரித்ததும் இல்லை, நீங்கள் இல்லாததால் இவ்வளவு அழுததும் இல்லை. எப்போதும் உங்களை நேசித்துக்கொண்டிருப்பேன்.. நாம் எப்போதும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று சொன்னது போல..

குறும்புத்தனமான சிரிப்பு
எப்போதும் பெரிய இதயம் கொண்ட ஒரு மனிதர் சிரு.. உங்களை மிஸ் பண்ணுவேன்.. உங்களின் அந்த குறும்புத்தனமான சிரிப்பு எப்போதும் எல்லோரின் இதயத்திலும் இருக்கும்.. இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த உருக்கமான பதிவை பார்த்த கன்னட திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

மூன்று பேரும் ஏறி
மேலும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மீது, அவர் உட்பட நண்பர்கள் மூன்று பேரும் ஏறியிருக்கம் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். பண்ணக பரனா, கன்னட சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான ஹேப்பி நியூ இயர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபல கன்னட இயக்குநரான டிஎஸ் நாக பரனாவின் மகன்தான் இந்த பண்ணக பரனா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











