நம்ம ஸ்டேட் யஷ், சுதீப்பை விட தனுஷ் முக்கியமோ?: ரம்யாவை விளாசிய கன்னட ஃபேன்ஸ்
Recommended Video

பெங்களூர்: நடிகை ரம்யாவை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் யூடியூபில் 100 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனுஷ் ட்வீட்டியதை பார்த்த நடிகை ரம்யா அவரை பாராட்டினார்.
ரம்யா
ரவுடி பேபியின் சாதனை குறித்து தனுஷ் போட்ட ட்வீட்டை பார்த்த ரம்யா வாவ், என்ன ஒரு பாடல் என்று கூறி பாராட்டியிருந்தார். இது சாண்டல்வுட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
யஷ்
நம்ம ஊரு யஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் பல சாதனைகள் படைத்துள்ளது. அதை பாராட்ட மனம் இல்லை. ஆனால் தனுஷை பாராட்ட மட்டும் நேரம் இருக்கிறதா என்று கன்னட ரசிகர்கள் ரம்யாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கன்னட படங்கள்
கன்னட படங்களை பாராட்டாத நீங்கள் அடுத்த முறை தமிழகத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடவும். இங்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயில்வான்
கிச்சா சுதீப்பின் பயில்வான் படம் குறித்து அனைவரும் பேசுகிறார்கள். ஆனால் அது பற்றி எல்லாம் பேச ரம்யாவுக்கு நேரம் இல்லை என்று கர்நாடக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











