கன்னட இயக்குநர் சாய் பிரகாஷ் தற்கொலைக்கு முயற்சி
பிரபல கன்னட இயக்குநர் சாய் பிரகாஷ் தற்கொலை செய்ய முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னடத்தில் குடும்ப சென்டிமென்ட்டுடன் கூடிய படங்களை இயக்கியும், தயாரித்துப் பிரபலமானவர் சாய் பிரகாஷ். நேற்று இவர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து சாய்பிரகாஷின் மகன் தனது தந்தையை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அபாய கட்டத்தைத் தாண்டியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் இவரது படம் பெரும் தோல்வியடைந்தது. இதனால் கடன் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சாய் பிரகாஷ் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











