திடீர் உடல் நலக்குறைவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இயக்குனர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

By

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் மரணமடைந்ததை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா துறையில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பலர் உயிரிழந்து வருகின்றனர். இது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாகவும் உடல் நலப்பிரச்னை காரணமாகவும் மரணமடைந்து வருகின்றனர்.

இயக்குனர் விஜய் ரெட்டி

இயக்குனர் விஜய் ரெட்டி

இந்நிலையில், பிரபல கன்னடப் பட இயக்குனர் விஜய் ரெட்டி, உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 84. இவர் சுமார் 50 படங்களை இயக்கியுள்ளார். விட்டலாச்சாரியாவிடம் உதவி எடிட்டராக சேர்ந்து சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் இவர். 1970 ஆம் ஆண்டு வெளியான, ரங்கமஹால் ரகசியா என்ற கன்னட படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

ராஜ்குமாரின் 150 வது படமான, கந்தடா குடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தார். அடுத்து ராஜ்குமார் நடித்த மயூரா என்ற வரலாற்றுப் படத்தை இயக்கினார். இதுவும் கன்னட சினிமாவில் முக்கியமான படமாக அமைந்தது. அடுத்து ராஜ்குமார், ஜெயப்பிரதா நடிப்பில் இயக்கிய, சன்னாடி அப்பன்னா படமும் சூப்பர் ஹிட்டாக ஓடியது.

விஷ்ணுவர்தன்

விஷ்ணுவர்தன்

பிரபல கன்னட ஹீரோ விஷ்ணுவர்தன் நடிப்பில் பல படங்களை இயக்கி உள்ளார். கன்னடம் மட்டுமல்லாமல், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களையும் இயக்கியுள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக விஷ்ணுவர்தன் நடித்த கர்நாடக சுபுத்ரா என்ற படத்தை இயக்கி இருந்தார்.

சென்னையில் காலமானார்

சென்னையில் காலமானார்

இந்தப் படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானது. சென்னையில் வசித்து வந்த விஜய் ரெட்டிக்கு, வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் நேற்று இரவு உயிரிழந்தார். இதை அவர் உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதையடுத்து கன்னட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X