உனக்கு சான்ஸ், எனக்கு.. கன்னட திரையுலகை உலுக்கும் செக்ஸ் புகார்!

By Veera Kumar

பெங்களூர்: கன்னட திரைப்பட இயக்குநர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக சின்னத்திரை நடிகை கூறிய புகார் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட 24 மணிநேர மியூசிக் சேனலில் டிஜேவாக வேலை பார்த்தவர் அந்த இளம் பெண். தனது அழகை பயன்படுத்தி திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. இதற்காக வாய்ப்பு தேடி அவர் போன இடம் இயக்குநர் குருதேஷ்பாண்டே அலுவலகம்.

ராஜஹுலி இயக்குநர்

ராஜஹுலி இயக்குநர்

இந்த குருதேஷ்பாண்டே இதுவரை ஒரு படம்தான் இயக்கியுள்ளார். ஆனால் அதுவும் ஹிட் ஆகிய திரைப்படமாகிவிட்டதால் சிறிது நற்பெயரை ஈட்டிவிட்டார். அந்த திரைப்படத்தின் பெயர் 'ராஜஹுலி'. தமிழில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம்.

சேலை உடுத்தி வரனும்

சேலை உடுத்தி வரனும்

இதனிடையே சான்ஸ் கேட்டு போன இடத்தில், குருதேஷ்பாண்டேவுக்கு நடிகையுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. சுடிதாரில் வந்திருந்த நடிகையை அடுத்த நாள் சேலை உடுத்திக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார் குருதேஷ்பாண்டே. இதையேற்று, அடுத்தநாள் சேலையில் போயுள்ளார் நடிகை.

தொடக்கூடாத இடங்களை தொட்டார்

தொடக்கூடாத இடங்களை தொட்டார்

இதன்பிறகு நடந்ததை அந்த நடிகையே இப்படி கூறுகிறார். "சேலை உடுத்தி முன்னால் சென்று நின்றதும், ஏற இறங்க என்னை குரு தேஷ்பாண்டே பார்த்தார். பிறகு என் அருகே வந்து, வயிற்றில் கை வைத்து தடவினார். எனக்கு ஒருமாதிரி இருந்தது. இதன்பிறகு தொடக்கூடாத இடங்களை தொட்டு தடவினார். 'இந்த' இடத்தில் சதை கொஞ்சம் குறைய வேண்டும், 'இந்த', 'இந்த' இடங்களில் சதை அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அந்த நடிகைகள் தேவலை...

அந்த நடிகைகள் தேவலை...

இதனால் வெறுப்படைந்து நான் அங்கிருந்து தப்பியோடி வீட்டுக்கு வந்தேன். இரவு எனது போனுக்கு அழைப்புவிடுத்து, நான் மது குடித்துவிட்டேன். என்னால் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. உடனடியாக நீ வா என்று அழைத்தார். மேலும், இதெல்லாம் சினிமா உலகில் சகஜம் என்று கூறி சில நடிகைகள் பெயரை சொல்லி, அவர்கள் எல்லாம் அட்ஜஸ்ட் செய்து பெரிய நடிகைகளாகிவிட்டனர் என்று கூறினார்.

பிகினி ஏன் தெரியுமா?

பிகினி ஏன் தெரியுமா?

முதல் சந்திப்பிலேயே பிகினி அணிந்து நடிக்க தயாரா என்று கேட்டார். தயார் என்றால், பிகினி அணிய வெட்கம் இல்லாதபோது, படுக்கையை பகிருவதில் வெட்கம் இருக்க தேவையில்லையே என்று குருதேஷ்பாண்டே கூறினார். இதற்காகவே பிகினி பாடல்களை வைத்து தயார்படுத்துவதாகவும் அவர் கூறினார். இருப்பினும் நான் சினிமா ஆசைக்கு முழுக்குபோட்டுவிட்டேன்" இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார்.

தொலைபேசி உரையாடல் அம்பலம்

தொலைபேசி உரையாடல் அம்பலம்

இத்தகவல்களை அந்த இளம் பெண் கன்னட செய்தி சேனல் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், டைரக்டர் தன்னிடம் ஜொள்விட்டபடி போனில் பேசிய உரையாடலையும் போட்டு காண்பித்தார். இதையடுத்து அந்த சேனல் சார்பில் குருதேஷ்பாண்டேவிடம் ஒரு ஸ்டிங் ஆபரேசன் நடத்தப்பட்டது. சேனல் சார்பில் ஒரு பெண்ணை சினிமா சான்ஸ் கேட்பது போல நடிக்க செய்து குருதேஷ்பாண்டேவிடம் அனுப்பி வைத்தனர். அவர் சான்ஸ் தருவதாக கூறி அந்த பெண்ணை கட்டியணைத்து பெட்டில் தள்ளுவது ரகசிய கேமராவில் படம்பிடிக்கப்பட்டு அதுவும் அந்த சேனலில் போட்டு காண்பிக்கப்பட்டது.

மேலும் பலரும் சிக்கினர்

மேலும் பலரும் சிக்கினர்

25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள ஓம்பிரகாஷ் ராவ், தயாரிப்பாளர் திவாகர் பாபு, கோவிந்த் ராஜு ஆகியோரிடமும் ரகசிய கேமரா ஆபரேசன் நடத்தி, சான்ஸ் கேட்டு போன பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஒளிபரப்பியது அந்த சேனல். இதனால் கர்நாடக திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X