ஓல்ட் புல்லட், பழைய ஸ்டைல் துப்பாக்கி.. 80-கள் லுக்கில் கிருஷ்ணா..தமிழில் ரீமேக் ஆகும் பெல்பாட்டம்!
சென்னை: நடிகர் கிருஷ்ணா, 80-களில் நடக்கும் கதையை கொண்ட படத்தில் நடிக்கிறார்.
கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், பெல்பாட்டாம். ரிஷப் ஷெட்டி, ஹரிப்பிரியா, யோக்ராஜ் பட், பிரமோத் ஷெட்டி, உட்பட பலர் நடித்திருந்தனர்.
ஜயதீர்த்தா இயக்கி இருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தப் படம் இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

மஹிமா நம்பியார்
இதை சத்ய சிவா இயக்குகிறார். இவர், கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த கழுகு, அசோக் செல்வன் நடித்த சவாலே சமாளி, ராஜ்கிரண் நடித்த சிவப்பு, கிருஷ்ணா நடித்த கழுகு 2 ஆகிய படங்களை இயக்கியவர். பெல்பாட்டம் படத்திலும் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார்.
ஹீரோயினாக மஹிமா நம்பியார் நடிக்கிறார்.

மூன்றாவது முறை
மஹிமா, சாட்டை, குற்றம் 23, கொடி வீரன், மகாமுனி உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இப்போது ஐங்கரன், அசுரகுரு உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். கன்னடத்தில் வைத்த அதே டைட்டிலை தமிழுக்கும் வைத்துள்ளனர். கழுகு, கழுகு 2 படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக கிருஷ்ணாவும் சத்ய சிவாவும் இந்தப் படத்தில் இணைகின்றனர்.

கைவிடப்பட்ட வழக்கு
படம் பற்றி இயக்குன்ர் சத்ய சிவா கூறும்போது, 'இது 80-களில் நடக்கும் கதை. சில சூழ்நிலைகளால் ஹீரோவின் போலீஸ் ஆசை நிறைவேறாமல் போய்விடுகிறது. இதனால் தனியார் துப்பறிவாளர் ஆகி, குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார். கைவிடப்பட்ட ஒரு வழக்கை அவர் விசாரிக்க, அதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

மர்மங்கள்
அந்தச் சிக்கல்கள், பிரச்னைகளை மீறி, அந்த வழக்கின் மர்மங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கி இருக்கிறோம். 80 களில் நடக்கும் கதை என்பதால், அதிகமாக மெனக்கெட்டிருக்கிறோம். சாம் சிஎஸ் இசை அமைத்திருக்கிறார். விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











