»   »  பெங்களூரில் விஐபி ஷூட்டிங்கில் பங்கேற்ற துணை நடிகை மர்ம மரணம்

பெங்களூரில் விஐபி ஷூட்டிங்கில் பங்கேற்ற துணை நடிகை மர்ம மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் படப்பிடிப்பு நடந்து வந்த இடத்திற்கு அருகே கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் கன்னட துணை நடிகை பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகர் வி. ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் நடித்து வரும் படம் விஐபி. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படத்தை நந்தகிஷோர் இயக்கி வருகிறார்.

Kannada junior artiste found dead in Bengaluru

படத்தின் பாடல் காட்சி பெங்களூர் ஏலஹன்கா அருகே உள்ள அவலஹள்ளியில் திங்கட்கிழமை படமாக்கப்பட்டது. அன்றைய படப்பிடிப்பில் 160 பேர் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பு முடிந்து மாலை அனைவரும் வீட்டிற்கு கிளம்பும்போது துணை நடிகை பத்மாவதி(44) மாயமானது தெரிய வந்தது. உடனே படக்குழுவினர் அவரை தேடினர்.

படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் லிப்ட் உள்ள பகுதியில் நடிகை பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜக்கூரை சேர்ந்த பத்மாவதி கடந்த 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்தார்.

English summary
A kannada junior artiste named Padmavati was found dead in a construction site in Bengaluru on monday evening.
Please Wait while comments are loading...