படப்பிடிப்பில் உயிரிழந்த காந்தாரா பட நடிகர்.. அதிர்ச்சியில் படக்குழு!

சென்னை: காந்தாரா 2 படப்பிடிப்பில் 33 வயதேயான துணை நடிகர் உயிரிழந்தது படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, மதிய உணவு இடைவெளியில் துணை நடிகர் ஆற்றில் குளிக்க சென்றள்ளார். அப்போது, ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகரித்ததால், அவர் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் காந்தாரா. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ400 கோடியை வசூலித்தது. இப்படத்தில் சப்தமி கௌடா, கிஷோர், பிரமோத் ஷெட்டி, நவீன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கன்னட மலை பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை காட்டிலும் காந்தாரா 2 படத்திற்காக மிக அதிக அளவில் மெனக்கெட உள்ளதாக படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார். இந்த படத்திற்காக பல வரலாற்று நிகழ்வுகளை தான் ஆய்வு செய்து படத்தில் இணைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Kantara 2 death 2

காந்தாரா2: இந்த திரைப்படம் அக்டோபர் 2 ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் துணை நடிகராக நடித்து வரும் கபில் என்பவர் உயிரிழந்துள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, மதிய உணவு இடைவெளியில் துணை நடிகர் கபிலன், ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது. ஆற்றில் திடீரென நீர் அதிகமாக வந்ததால், அவர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்து உடலை பல இடத்தில் தேடினர். பல மணி நேர தேடுதலுக்கு பின் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினர் அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் காந்தாரா படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால், படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X