அடப்பாவிகளா, பப்ளிசிட்டிக்காக ரஜினி வருவதாக புரளியை கிளப்பிய படக்குழு
பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இசையை வெளியிடப் போவதாக கன்னட படமான முட்டு மனசே படக்குழு பப்பளிசிட்டிக்காக தெரிவித்துள்ளதாம்.
கடந்த 13ம் தேதி ரஜினிகாந்த் பெங்களூருக்கு வந்துள்ளதாகவும், அன்று மாலை நடக்கும் கன்னட படமான முட்டு மனசே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் தான் இசையை வெளியிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் முட்டு மனசே இசை வெளியீட்டை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். விழாவுக்கு வந்தவர்கள் ரஜினியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினி வராமலேயே இசை வெளியிடப்பட்டு நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இதனால் ரஜினியை பார்க்கும் ஆசையில் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
என்னவென்று விசாரித்தால் இசை வெளியீட்டு விழா ஏற்பாட்டாளர்கள் விளம்பரம் தேட ரஜினி வருவதாக தெரிவித்தது தெரிய வந்தது.
ஒரு படத்திற்கு விளம்பரம் தேட இப்படியா செய்வது.


Click it and Unblock the Notifications











