திடீர் மாரடைப்பு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகம் சோகம்!

By

பெங்களூரு: பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலகட்டத்தில், சினிமா துறையில் பலர் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் அருகில்

வீட்டின் அருகில்

இந்நிலையில், பிரபல கன்னட படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான தினேஷ் காந்திக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

சுதீப்பின் வீரமடகாரி

சுதீப்பின் வீரமடகாரி

தினேஷ் காந்தியின் திடீர் மறைவு கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ரசிகர்களும் கன்னட திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தினேஷ் காந்தி, சில ஹிட் படங்களை தயாரித்துள்ளார். சுதீப், ராகிணி திவேதி நடித்த வீர மடகாரி படத்தை தயாரித்தார்.

ரவிச்சந்திரனின் ஹூ

ரவிச்சந்திரனின் ஹூ

இது ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டான விக்ரமார்குடு படத்தின் ரீமேக். இது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டானது. ரவிச்சந்திரன், மீரா ஜாஸ்மின், நமீதா, பிரகாஷ் ராஜ் நடித்த ஹூ (Hoo) படத்தையும் தயாரித்தார். இது தமிழில், விக்ரமன் இயக்கத்தில் உருவான பிரியமான தோழி படத்தின் ரீமேக். இதுவும் வரவேற்பை பெற்றது.

குழந்தைகள் சினிமா

குழந்தைகள் சினிமா

டாக்டர் சித்தார்த், பிரியதர்ஷ்னி பானுப்ரியா நடித்த சத்ரபதி உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். அடுத்து குழந்தைகள் படம் ஒன்றை இயக்க இருந்தார். அதில் தனது மகனை நடிக்க வைக்கவும் திட்டமிட்டு இருந்தார். கொரோனா காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

சிரஞ்சீவி சார்ஜா

சிரஞ்சீவி சார்ஜா

தினேஷ் காந்தியின் மறைவை அடுத்து கன்னட நடிகர், நடிகைகள் ஷாக் ஆகியுள்ளனர். கொரோனா காலகட்டத்தில், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அடுத்து காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மேலும் அதிர்ச்சி

மேலும் அதிர்ச்சி

பின்னர், மூத்த நடிகர் ராக்லைன் சுதாகர், கன்னட பட இயக்குனர் விஜய் ரெட்டி, இசை அமைப்பாளர் ரஞ்சன் ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்து இருந்தனர். இந்நிலையின் தினேஷ் காந்தியும் மறைந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X