»   »  பட வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளருக்கு தர்மஅடி, கைது

பட வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளருக்கு தர்மஅடி, கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் பட வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை கன்னட தயாரிப்பாளர் வீரேஷ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகையாகத் துடிக்கும் பெண் ஒருவரை படம் குறித்து பேச தனது வீட்டிற்கு வருமாறு கன்னட தயாரிப்பாளர் வீரேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் வீரேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கதாபாத்திரத்தை எடுத்துரைக்கிறேன் என்ற பெயரில் வீரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீரேஷை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி வந்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரின் குடும்பத்தார் நேராக வீரேஷின் வீட்டிற்கு வந்து அவரை அடித்து நொறுக்கி அதை வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரேஷை கைது செய்துள்ளனர்.

வீரேஷை அடித்து நொறுக்கியபோது எடுத்த வீடியோவும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

English summary
Bengaluru police arrested Kannada movie producer Viresh after he tried to sexually assault a girl on the pretext of discussing a movie with her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil