திருமணமான ஒரே ஆண்டில் சீரியல் நடிகர் தற்கொலை.. மனஅழுத்தத்தால் விபரீத முடிவு !
பெங்களூர் : பிரபல சீரியல் நடிகர் சம்பத் ஜெயராம் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 35.
இளம் நடிகரின் மறைவு கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமாவில் நல்ல வேடங்கள் கிடைக்காததால், அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

சீரியல் நடிகர் தற்கொகொலை : சீரியல் நடிகரான சம்பத் ஜெயராம் அக்னிசாக்ஷி என்ற கன்னட சீரியலில் நடித்து பிரபலம் ஆனார். சினிமா வாய்ப்பை தேடி வந்த இவருக்கு சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்கள் கிடைத்து வந்தன. அண்மையில் சம்பத் ஜெயராம் ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ என்ற படத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார்.
பிரேத பரிசோதனை : இவர் நெலமங்கலத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், சனிக்கிழமை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப்பரிசோதனை முடிந்ததும் அவரது உடல் ஹூத்துரா என்.ஆர்.பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
திருமணமான ஒரே ஆண்டில் : இவருக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில், படவாய்ப்பு இல்லாததால், மன வேதனையில் இருந்துள்ளார். நல்ல நடிப்பு திறமை இருந்தும் படங்கள் அமையாதால், இந்த விபரீதமான முடிவை எடுத்துவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சின்ன வயதில் சம்பத் ஜெயராம் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது கன்னட திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நண்பன் வேதனை : சம்பத் ஜெயராம் மறைவால் வேதனை அடைந்த அவரது நண்பர், ராஜேஷ் துருவா இன்ஸ்டாவில் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். இதில், உன் பிரிவை சமாளிக்கும் சக்தி எங்களிடம் இல்லை.. எத்தனையோ படங்கள் உருவாகி, பல சண்டைகள் நிலுவையில் உள்ளன, உன் கனவுகளை நனவாக்கும் நேரம். தயவுசெய்து திரும்பி வாருங்கள் என கண்ணீருடன் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
மனம் விட்டு பேசுங்கள் : தற்கொலை செய்து கொல்லும் எண்ணம் ஒரு நொடியில் வந்து செல்லும் எண்ணம் தான். மனவிரக்தியில் இது போன்ற எண்ணம் வரும் போது, தனிமையில் இருப்பதை தவிர்த்துவிட்டு, யாரிடமாவது மனம் விட்டு இரண்டு நிமிடம் பேசினால், மீண்டும் இந்த எண்ணம் மனதிற்குள் வராதது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான்.


Click it and Unblock the Notifications











