கன்னட ஸ்டார் உபேந்திராவின் கப்ஸா... ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!

பெங்களுர் : இதுவரை காதல் படங்களையே இயக்கி வந்த இயக்குனர் ஆர் சந்துருவின் வித்தியாசமான சிந்தனையில் உருவாகி உள்ள திரைப்படம் தான் கப்ஸா.

பீரியட் ஆக்‌ஷன் திரைப்படமான இப்படத்தில், உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மார்ச் 17 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ சித்தேஷ்வரா எண்டர்பிரைசஸ் மற்றும் அலங்கார் பாண்டியன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கப்ஸா

கப்ஸா

கேஜிஎஃப், காந்தாரா போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து கன்னட திரையுலகம், அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகி உள்ளது. தாஜ்மஹால், சார்மினார் போன்ற காதல் படங்களை இயக்கி வந்த இயக்குநர் சந்துரு, முதல் முறையாக ஒரு பீரியட் கேங்ஸ்டர் திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையில் காண ரசிகர்கள் ஆர்வம்

திரையில் காண ரசிகர்கள் ஆர்வம்

கன்னட சினிமாவின் ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரம்மா, ஐ லவ் யூ படங்களுக்குப் பிறகு சந்துருவுடன் மூன்றாவது முறையாக கப்ஸா படத்தில் இணைந்துள்ளார். உபேந்திராவை கேங் ஸ்டராக, ஒரு டானாக திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தா அமையும்.

ராணியாக ஸ்ரேயா

ராணியாக ஸ்ரேயா

கப்ஸா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரேயா, எனது திறமையை வெளிப்படுத்த இந்த படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்து விட்டது என்றும், பெங்களூருவுக்குத் திரும்பி, மீண்டும் ஒரு கன்னடப் படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரத்தையும் இங்குள்ள மக்களையும் நான் விரும்புகிறேன் என்று ஸ்ரேயா கூறியிருந்தார்.

அனல் பறக்கும் பாடல்

அனல் பறக்கும் பாடல்

இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியான நிலையில், 'நமாமி நமாமி' பாடல் ரசிகர்களை வெளியாக கவர்ந்துள்ளது. இந்த பாடலில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சியிலும் மிரட்டி உள்ளார். அதே போல, மூன்றாவது பாடலான 'கப்ஸா கப்ஸா' என்ற பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையில் பாடகர் ஸ்னிக்தஜித் பௌமிக்கின் குரலில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X