46 வயது.. 29 படங்கள்.. குழந்தை நட்சத்திரம் டூ கன்னட சூப்பர் ஸ்டார்... கலங்க வைத்த புனித்தின் மரணம்!

பெங்களூரு: கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மரணம் ஒட்டு மொத்தத் திரைத்துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Appu Please திரும்ப வா... கதறும் பிரபலங்கள் | Kannada Actor Puneeth Rajkumar Passed Away

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான புனித் ராஜ்குமார் காலையில் வழக்கம் போல் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். திடீரென மயங்கி சரிந்து விழுந்துள்ளார் புனித்.

இதையடுத்து பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் புனித் ராஜ்குமார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

நேரம் தவறிவிட்டது

நேரம் தவறிவிட்டது

ஆனால் கோல்டன் ஹவர்ஸ் என சொல்லப்படும் உயிரை காப்பாற்றக்கூடிய அந்த நேரம் தவறிவிட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. தொடர்ந்து புனித் ராஜ்குமார் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

புனித் ராஜ்குமார் மரணம்

புனித் ராஜ்குமார் மரணம்

புனித் ராஜ்குமாரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பகல் ராஜ்குமார் பகல் 1.30 மணிக்கு புனித் ராஜ்குமாரின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது. அவருக்கு வயது 46.

ராஜ்குமாரின் ஐந்தாவது மகன்

ராஜ்குமாரின் ஐந்தாவது மகன்

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமாரின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத் துறையையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் புனித் ராஜ்குமார் 1975ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். புனித் ராஜ்குமார். கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் ஐந்தாவது மகன் ஆவார்.

சிறுவயதிலேயே தேசிய விருது

சிறுவயதிலேயே தேசிய விருது

புனித் ராஜ்குமார் 1976ஆம் ஆண்டு வெளியான பிரேமடா கனிக்கே என்ற படத்தில் பச்சிளம் குழந்தையாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் புனித் ராஜ்குமார். பெட்டடா ஹுவு என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை சிறு வயதிலேயே பெற்றார் புனித் ராஜ் குமார்.

அப்பு படத்தின் மூலம் ஹீரோவாக

அப்பு படத்தின் மூலம் ஹீரோவாக

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் தொலைக்காட்சி பிரபலம் என பல முகங்களை கொண்டிருந்தார். 2002ஆம் ஆண்டு வெளியான அப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் புனித் ராஜ்குமார். 29 படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார்.

கடைசியாக யுவரத்னா

கடைசியாக யுவரத்னா

ஃபிலிம் ஃபேர் விருது, சைமா விருது, கர்நாடக மாநில அரசின் விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் புனித் ராஜ்குமார். அவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி யுவரத்னா என்ற படம் வெளியானது. தற்போது ஜேம்ஸ் மற்றும் டிவிட்டா என்ற இரண்டு படங்களில் நடித்து வந்தார் புனித் ராஜ்குமார்.

இரண்டு மகள்கள்

இரண்டு மகள்கள்

புனித் ராஜ்குமார், கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அஷ்வின் ரேவந்த் என்பவரை திருமணம் செய்தார். அஷ்வினி ரேவந்த் நண்பர் ஒருவரின் மூலம் புனித் ராஜ்குமாருக்கு அறிமுகமானார். நட்பாக ஆரம்பித்த அவர்களது பழக்கம் பின்னர் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு திரித்தி, வந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

உடற்பயிற்சியின் போது கார்டியாக் அரெஸ்ட்

உடற்பயிற்சியின் போது கார்டியாக் அரெஸ்ட்

உடல் ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட புனித் உடற் பயிற்சி செய்வதிலும் பேரார்வம் கொண்டவர். அவர் உடற்பயிற்சி செய்யும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இன்று உடற்பயிற்சி மேற்கொண்ட போதுதான் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X