சிறுநீர்ப்பை அகற்றம்.. அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முடிந்தது.. சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்!
சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு இன்று அமெரிக்காவில் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சற்று முன் அறுவை சிகிச்சை முடிந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது சிறுநீர்ப்பை அகற்றப்பட்டுவிட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளனர்.
கன்னட நடிகரான சிவராஜ்குமார், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறியிருந்த நிலையில் கடந்த வாரம், பெங்களுரில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டிசம்பர் 25 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது என்றும், மருத்துவர் முருகேஷ் என் மனோகர் தான் எனக்கு சிகிச்சை செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.

சிறுநீர்ப்பை அகற்றம்: இதையடுத்து, நடிகர் சிவராஜ்குமாருக்கு ஆப்ரேஷன் முடிந்துவிட்டதாக மருத்துவர் வீடியோ கூறியுள்ளார். அதில், அவரின் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு, அவரின் குடலை பயன்படுத்தி செயற்கை சிறுநீர்ப்பை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் கூறி உள்ளார். சுமார் ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கி அனைத்து சிகிச்சைகளையும் முடித்துவிட்டு ஜனவரி 26ந் தேதி இந்தியாவுக்குத் திரும்ப இருக்கிறார். அவருடன் மனைவி கீதாவும் என் இளைய மகள் நிவேதிதா உடன் உள்ளனர்.சிவராஜ்குமார் அறுவை சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முன்னதாக பல ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பூஜை நடந்தது.
கைவசம் உள்ள படம்: சிவ ராஜ்குமாரின் பைரதி ரணங்கள் நவம்பர் 15ந் தேதி வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. தற்போது உத்தரகாண்டா, 45, பைரவனா கோனே பாட உட்பட பல படங்களில் பணிபுரிந்து வருகிறார், மேலும் ராம் சரணின் RC 16 படத்திலும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











