Don't Miss!
- Sports
"உங்க பாட்ஷா இனியும் பழிக்காது".. மைண்ட் கேம் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்.. அஸ்வின் தந்த தரமான பதிலடி
- News
அசாமில் குழந்தை திருமணம்: கைது பண்ணுறது சரி..கைதானவர்களின் மனைவி, பிள்ளைகளுக்கு யார் பொறுப்பு..ஒவைசி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் 2 பெண்களை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த கன்னட டிவி நடிகர் மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதி இரவு அந்த பெண்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர்.

அந்த நேரத்தில் யாரோ கதவை தட்ட உணவு தான் வந்துவிட்டது என்று நினைத்துள்ளனர். கதவை திறந்தால் யாரோ 3 ஆண்கள் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அந்த 3 பேரும் கத்தி முனையில் அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கன்னட டிவி நடிகர் ராகேஷ்(24), கேப் டிரைவர் மணிகண்டா(25), பானி பூரி விற்கும் சூர்யா(23) ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அந்த 3 பேரும் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியுள்ளனர். அன்த பெண்கள் நடந்ததை தங்கள் தோழிகளிடம் தெரிவித்து அழ அவர்கள் போலீசாரை அணுகியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கோரமங்களா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.