Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
30 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் நடிகர் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கன்னட திரையுலகம்
பெங்களூரு: கன்னட டிவி நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்பு கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் இந்தியளவில் ரசிகர்களை வாட்டி வந்த நிலையில், இன்னொரு இளம் நடிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக கன்னட நடிகரான சிரு உடல் நலக் குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

30 வயசு தான் ஆகுது
கன்னட டிவி நடிகர் சுஷீல் கவுடா நேற்று (ஜூலை 7) கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். சுஷீல் கவுடாவின் இந்த திடீர் மரணம், கன்னட திரையுலகில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. சீரியலில் பிரபலமாக நடித்து வந்த அவர், விரைவில் திரையுலகில் சலகா எனும் படத்தில் அறிமுகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
ஆனால், சுஷீல் கவுடாவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் இதுவரை எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. சூசைட் நோட் கைப்பற்றப்பட்டதா? இல்லையா? என்பது குறித்த தகவலும் கிடைக்கவில்லை. முதற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

விரைவில் அறிமுகம்
கன்னட நடிகர் துனியா விஜய் நடிப்பில் உருவாகி வரும் சலகா எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் பிரபல சீரியல் நடிகர் சுஷீல் கவுடா. லாக்டவுனுக்கு பிறகு அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், திடீரென இப்படி தற்கொலை செய்து கொண்டு, இந்த இளம் நடிகர் உயிரிழந்தது குறித்து அறிந்த நடிகர் துனியா விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மற்றொரு இழப்பு
மன அழுத்தம் காரணமாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், 30 வயதே ஆன மற்றொரு இளம் நடிகர், என்ன காரணத்திற்கு என்றே தெரியாமல், தற்கொலை செய்து கொண்டிருப்பது திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மற்றொரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சோகத்தில் சாண்டல்வுட்
நடிகர் அர்ஜுனின் மருமகனும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான இளம் நடிகர் சிரு என்கிற சிரஞ்சிவி சர்ஜாவின் மரணம் கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி வந்த நிலையில், மற்றுமொரு இளம் நடிகரின் தற்கொலை மரணம் சண்டல்வுட்டை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. உயிரிழந்த சுஷீல் கவுஷிக்கின் குடும்பத்தினருக்கு பலரு ஆறுதல் கூறி வருகின்றனர்.