டிவி நடிகையை பலமுறை கத்தியால் குத்திய கணவர்.. ஆபத்தான நிலையில் நடிகை மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: கன்னட டிவி நடிகையான மஞ்சுளா ஸ்ருதியை அவரது கணவர் பல முறை கத்தியால் குத்தியால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 38 வயதான அந்த நடிகையின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னட நடிகை மஞ்சுளா ஸ்ருதி, ஹனுமந்தநகரில் வசித்து வருகிறார். ஜூலை 4ந் தேதி, கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்துள்ளார் மஞ்சுளா. அப்போது, மஞ்சுளாவின் கணவர், மிளகு ஸ்ப்ரேயை முகத்தில் அடித்து தலைமுடியைப் பிடித்து சுவரில் தள்ளிவிட்டு கையில் வைத்திருந்த கத்தியால், மார்பு, கழுத்து மற்றும் விலா எலும்புகளில் பலமுறை கத்தியால் குத்தியால் குத்தி உள்ளார். நடிகையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தின் பதறி ஓடி வந்து பார்த்த போது, அந்த இடத்தில் நடிகை ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். அவரை மீண்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

TV actress Manjula Shruthi
Photo Credit:

பல இடத்தில் கத்திக்குத்து: இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகையின் கணவர் அம்ரேஷ்சை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை அதிகாரி, ஜூலை 4-ம் தேதி, குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகு, அம்ரேஷ், வீட்டிற்கு வந்து மஞ்சுளாவுடன் சண்டையிட்டு, மிளகு ஸ்பிரே அடித்த பிறகு மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது கணவரை கைது செய்தோம்.

மஞ்சுளா ஸ்ருதியின் கணவர் கைது: நடிகை மஞ்சுளா ஸ்ருதிக்கும் அவரது கணவருக்கும் ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருந்தது, கடந்த ஏப்ரல் மாதம், மஞ்சுளா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போதே, அவர் மீது காவல்நிலையத்தில் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இதனால், நடிகையின் கணவர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு ஜூலை 16ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

மஞ்சுளா ஸ்ருதி யார்?: பிரபல கன்னட டிவி சீரியல் நடிகை மஞ்சுளா ஸ்ருதி, கன்னட டெய்லி சோப் 'அம்ருததாரே' மூலம் பரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மஞ்சுளா ஸ்ருதி, அம்ரேஷ் இருவரும் காதலித்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகு, ஆட்டோ டிரைவரான அம்ரேஷ், பணம் மற்றும் பிற வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக தனது மனைவி மஞ்சுளாவை தொந்தரவு செய்யத் தொடங்கினார். இதனால், நடிகை மஞ்சுளா ஸ்ருதி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அண்மையில், இருவரும் ஒன்று சேர்ந்தனர் என்று கூறப்படுகிறது. இதற்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டு, மனைவி என்றும் பார்க்காமல் அம்ரேஷ் கத்தியால் குத்தி உள்ளார். தற்போது நடிகை, மருத்துவ சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X