»   »  'பாமர ஜாதியில் தனி மனிதன்- நான் படைப்பதனால் என் பேர் இறைவன்!'

'பாமர ஜாதியில் தனி மனிதன்- நான் படைப்பதனால் என் பேர் இறைவன்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மரணத்தை வெல்ல முடியுமா? முடியும் என்று நிரூபித்த தமிழ்ப் பெருமகன்களில் ஒருவர் கவியரசு கண்ணதாசன்.

இந்த பூத உடல் அழுகாமல் காலத்துக்கும் வாழ்வதிலா மரணம் வெல்லப்படுகிறது...? இல்லை... உடல் சாகத்தான் வேண்டும். ஆனால் அந்த உடல் இருக்கும்போதே, மரணத்தை வெல்லும் மகத்தான சாதனைகளைச் செய்துவிட வேண்டும். அப்புறம்.... ஒரு மனிதனுக்கு மரணமேது?

Kannadasan 35th death anniversary

அப்படி ஒரு மகத்தான சாதனையாளன், பெருங்கவிஞன், தத்துவஞானி, நிகரற்ற எழுத்தாளன்தான் கவியரசு கண்ணதாசன்.

மரணத்தைத் தழுவி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் அவரது சாதனை... நேர்மை... உண்மைமிக்க அவரது எழுத்துகள்.

தனக்கான வாழ்த்துப் பாவைக் கூட முன்கணித்து எழுதி வைத்துச் சென்ற மேதை.

இதோ அந்தப் பாட்டு...

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...

காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்- நான்
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்- நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைபாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...!"

English summary
Today is the 35th death anniversary of great poet Kannadasan
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil