Saroja devi: கணவர் இறந்ததும் மனஅழுத்தத்தில் இருந்தேன்..மனம் நொந்த சரோஜா தேவி!
சென்னை: கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் நடிகை சரோஜா தேவி மகாகவி காளிதாஸா என்ற கன்னட படத்தின் மூலம்தான் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்தார்.
அடுத்தடுத்து கன்னட படங்களில் நடித்த சரோஜா தேவி திருமணம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிய சரோஜா தேவி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார்.

நடிகை சரோஜா தேவி: அதில், தமிழ், கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, ஆகிய பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கிறேன். கை நிறைய படமா இருக்கும் நைட் அண்ட் டே என தினமும் 3 மணி நேரம் தான் தூங்குவேன். தமிழில் எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் என பலருடனும் ஜோடிப் போட்டு நடித்து இருக்கிறேன்.
பாராட்டினார்: எம்.ஜி.ஆருடன் பலத்திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் அவர் என் தெய்வம். அவர் தான் என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதே போல, சிவாஜி கணேஷன் ஒரு சிறந்த நடிகர், அவருடன் நாம் நடித்தால், நமக்கும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லித்தருவார். பாலும் பழமும் படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடித்தோம் அப்போது,சிவாஜி என்னைவிட நீ நல்லா நடிச்சு இருக்க என்று சொன்னார். உண்மையில் அதுதான் எனக்கு கிடைத்த பெரிய விருது.
கணவர் இறந்தார்: திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது தான் 1967 ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எங்களது திருமணம் மிகவும் கோலாகலமாக ஐந்து நாட்கள் நடந்தது. ஆனால், அவர் 1986ம் ஆண்டு என்னைவிட்டு சென்று விட்டார். அவர் போனதும் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு சென்று விட்டேன். அதில் இருந்து என்னை கடவுள் தான் காப்பாற்றினார். கடவுள் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டார்.

திருமணத்திற்கு பின் நடித்தேன்: திருமணத்திற்கு பிறகு நான் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருந்தேன், அவரிடம் தொடர்ந்து நடிக்கட்டுமா என்று கேட்டேன். அவர் தாராளமா நடி எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டார். அதன், பின் நிறையபடங்களில் நடிக்காமல் கதைகளை தேர்வு செய்து நடித்தேன் மாதத்தில் பதினைத்து நாள் ஷூட்டிங், பதினைந்து நாள் வீட்டில் என் கணவருடன் இருப்பேன் என்று கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
குழந்தைகள்: நடிகை சரோஜா தேவி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வாி என்கிற தனது அக்கா மகள் சீதாதேவியை மகளாக தத்தெடுத்து வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











