Kannagi BlueSattai Review: ”ஐடியா நல்லா இருக்கு.. ஆனா மிஸ் பண்ணிட்டாங்க” கண்ணகி ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கண்ணகி திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
கண்ணகி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள கண்ணகி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், 4 கதைகளுடன் உருவாகியுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, "கண்ணகி ஒரு ஆந்தாலஜி படம்ன்னும் சொல்லலாம், இல்லன்னா ஆந்தாலஜி மாதிரியான படம்ன்னும் சொல்லலாம்."

"நாலு பெண்களோட வாழ்க்கைல வெவ்வேறு காலக்கட்டத்துல நடந்த சம்பவம் தான் கண்ணகி படத்தோட கதை. இதுல கிராமத்துல படிச்ச ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க. ஆனா அந்த பொண்ணோட அம்மா எல்லா மாப்பிள்ளையும் ரிஜக்ட் பண்ணிடுறாங்க. இதனால அந்த பொண்ணுக்கு கல்யாணமே நடக்கல, அதுக்கு அப்புறம் என்னாச்சுங்குறது ஒரு கதை."
"இன்னொரு பொண்ணு கோர்ட்ல கேஸ் கட்டோட நிக்குது. கல்யாணமான அந்த பொண்ணு டைவர்ஸ் கொடுக்க மாட்டேன்னு கோர்ட்டுக்கு போகுது. அந்த வழக்க ஒரு வக்கீல் எடுத்து நடத்துறார்.. அப்போ அந்த வக்கீல் பையனுக்கும் பொண்ணுக்கும் காதல் வருது... அதனால டைவர்ஸ் கொடுக்க அதுக்கு அப்புறம் என்ன ஆகுதுங்குறது இன்னொரு கதை."
"அடுத்து ஐடி கம்பெனில வேலை பாக்குற பொண்ணு கல்யாணம் பண்ணாம லிவிங்டுகெதர்ல இருக்குது. ஆனா, கூட இருக்குற பையன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல, அதுக்கு அப்புறம் என்னாச்சுங்குறது இன்னொரு கதை. கடைசியா இன்னொரு பொண்ணு ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் கூட லிவிங்ல இருந்து கர்ப்பமாகுது. அது என்னாச்சுன்னு ஒரு கதை. இந்த நாலும் சேர்ந்து ஒரு கதையா வருது." என கதை குறித்து கூறியுள்ளார்.
மேலும், "படத்துக்கு டைட்டில் கண்ணகின்னு வச்சிருக்காங்க. இப்ப மட்டும் மதுரையை எரிச்ச கண்ணகி உயிரோட இருந்துருந்தா, மொத்த டீமையும் தீ வச்சு கொளுத்திருக்கும். முதல் கதையில் பொண்ணோட அம்மா பாக்குற மாப்பிள்ளைய ஏன் ரிஜக்ட் பண்றாங்கன்னு தெரியல. இரண்டாவது கதைல ஏன் லிவிங்ல மட்டும் இருப்பேன்னு அந்த பொண்ணு சொல்லுதுன்னு புரியல. மூனாவது, நாலாவது கதைகள்லயும் எந்த காரணமும் சொல்லாம எடுத்து வச்சிருக்காங்க."
"தியேட்டர்ல இருந்து பாதிலேயே வெளிய வர முடியாம இந்தப் படத்த பார்க்க வேண்டியதா ஆகிடுச்சு. இதெல்லாம் போக கடைசியா டைரக்டர் வந்து ஒரு கதை சொல்றாரு. எப்பவுமே ஆடியன்ஸ் தான் புத்திசாலின்னு படம் எடுக்கணும். ஆனா இங்க டைரக்டர் தன்னைத் தானே புத்திசாலின்னு சொல்லி அத ரசிகர்கள்கிட்ட திணிச்சிருக்கார். ஒட்டுமொத்தமா இந்தப் படத்துல மயில்சாமி, அம்மு அபிராமி நடிப்ப தவிர பெருசா எதும் இல்ல" என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











