Kannagi: கண்ணகி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியே போட்டுட்டாங்களே.. சர்ச்சையை கிளப்புமா?
சென்னை: வயதுக்கு வந்த பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்றும் தீட்டு நேரத்தில் கோயிலுக்கு பெண்கள் போகக் கூடாது என சொல்லப்படுட் வரும் நிலையில், கண்ணகி படத்தின் கிளைமேக்ஸில் அப்படியொரு சீனை வைத்துள்ளார் அந்த படத்தின் இயக்குநர் யஷ்வந்த் கிஷோர்.
அயலி வெப்சீரிஸில் சமீபத்தில் வயதுக்கு வந்த பெண்கள் கோயிலுக்கு செல்லக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு இருக்க அதை மீறி வயதுக்கு வந்த பெண் எப்படி உள்ளே செல்கிறாள் என்பதை காட்டியிருப்பார்கள்.

இந்நிலையில், கண்ணகி படத்திலும் அப்படியொரு போல்டான காட்சி தற்போது இடம்பெற்றுள்ள நிலையில், அந்த படம் வெளியானாலும் சர்ச்சை வெடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கோயிலில் திருமணம்: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா என 4 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி என்று தற்போது ஒரு ஸ்நீக் பீக்கை படக்குழு வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது. அம்மு அபிராமி மணக்கோலத்தில் திருமணத்துக்கு தயாராகி இருக்க அவருக்கு பீரியட்ஸ் ஏற்பட்டு விடுகிறது. அதனால், கோயிலுக்கு செல்லாமல் கீழே ஒரு ஓரமாக இருக்கும் தனது மகளை தேடி வரும் தாய் மெளனிகாவுக்கு விவரம் புரிந்து விட அவர் தவிக்கும் தவிப்பு பெண்களை மிகவும் கவர்ந்து விடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
பீரியட்ஸ் உடன் கோயிலுக்கு: பீரியட்ஸ் ஏற்பட்ட நிலையில், கோயில் படியேற மணப்பெண் யோசிக்க ஒட்டுமொத்த சொந்தங்களும் மாப்பிள்ளையும் திருமணத்துக்கு ரெடியாகி இருக்க மெளனிகா செய்யும் காரியமும் அவர் கொடுக்கும் தைரியத்தால் மணமேடைக்கு வந்து அமரும் அம்மு அபிராமியின் காட்சிகளும் இடம்பெற்று பாராட்டுக்களை அள்ளி உள்ளன.
சர்ச்சையை கிளப்புமா?: மேலும் விதவையான தான் அங்கே நிற்கக் கூடாது என மெளனிகா மணமேடையை விட்டு நகர்ந்து செல்வதும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஆனால், இந்த முற்போக்கான காட்சிகள் படம் வெளியான பின்னர் பல சர்ச்சைகளை கிளப்புமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சில மூடநம்பிக்கைகளை மக்கள் விட்டு விட வேண்டும் என்றும் இயற்கையான பீரியட்ஸ் தீட்டுக் கிடையாது என்றும் இயக்குநர் உணர்த்தியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











