Kannagi Trailer: கவனம் ஈர்க்கும் கண்ணகி ட்ரெய்லர்... ரசிகர்களிடம் கிடைத்த பாசிட்டிவ் ரியாக்‌ஷன்!

சென்னை: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கண்ணகி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

kannagi-trailer-keerthi-pandian-ammu-abhirami-starrer-kannagi-trailer-is-out-now

கவனம் ஈர்க்கும் கண்ணகி ட்ரெய்லர்
யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள கண்ணகி திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மெளனிகா, வித்யா பிரதீப், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணகி படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று நிமிடங்கள் வரை ஓடும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களின் காதல், திருமணம், தாய்மை போன்றவற்றை பின்னணியாக வைத்து, நான்கு கதைகளுடன் உருவாகியுள்ளது கண்ணகி. முன்னதாக கண்ணகி படத்தில் இருந்து வெளியான கீர்த்தி பாண்டியனின் போஸ்டரும் அதிகமாக வைரலாகியிருந்தது.

தற்போது வெளியான ட்ரெய்லரிலேயே கண்ணகி படத்தின் பேசுபொருள் என்ன என்பதை இயக்குநர் தெளிவாக விவரித்துள்ளார். இதன்மூலம் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேநேரம் கண்ணகி ப்ரிவியூ ஷோ பார்த்த சினிமா விமர்சகரும் எழுத்தாளருமான கேபிள் சங்கர் உள்ளிட்டோர் படத்தை பாராட்டியிருந்தனர்.

முக்கியமாக மறைந்த மயில்சாமியும் இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். அவரது நடிப்பும் கண்ணகி படத்துக்கு பெரும் பலமாக அமையும் என ப்ரிவியூ ஷோ பார்த்த விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதேபோல் கண்ணகி படத்திலும் அவர் உயிரிழந்து போவதாக காட்சி இருக்கிறதாம். வரும் 15ம் தேதி வெளியாகும் கண்ணகி, கண்டிப்பாக பெரியளவில் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=oZqFja2YN7g

லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள ஃபைட் க்ளப் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி ரிலீஸாகிறது. அதேநாளில் மேலும் பல படங்கள் வெளியாகவிருந்தாலும், கண்ணகி தான் சூப்பர் ஹிட் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்தாண்டு வெளியான குட் நைட், போர் தொழில், இறுகப்பற்று போன்ற மினிமம் பட்ஜெட் படங்கள் வரிசையில் கண்ணகியும் இணையுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X