கண்ணை நம்பாதே படத்தில் ஜெயலலிதா பற்றி சர்ச்சை காட்சியா? விளக்கம் கொடுத்த இயக்குநர்!
சென்னை : கண்ணை நம்பாதே படத்தில் ஜெயலலிதா பற்றி சர்ச்சை காட்சி எதுவும் இல்லை என்று இயக்குநர் மு மாறன் விளக்கம் அளித்துள்ளார்.
மு மாறனின் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. இப்படத்தில், ஆத்மிகா, பூமிகா சாவ்லா, பிரசன்னா, சதீஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்து உள்ளார்.

கண்ணை நம்பாதே
விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படம் தான் தன்னுடையை கடைசி திரைப்படம் என்று கூறியிருந்தார். இதையடுத்து, நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று திரையரங்கி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சர்ச்சைக்குரிய காட்சி
இந்நிலையில், கண்ணை நம்பாதே திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சி நேற்று பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்டது. அதில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததை கிண்டல் செய்யும் வகையில் ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த காட்சி குறித்து செய்தியாளர்கள் இயக்குநரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

சீரியசா எடுத்துக்காதீங்க
இதற்கு பதிலளித்த இயக்குநர் மு மாறன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தில் இடம் பெற்ற காட்சியை காமெடியாக தான் நாம் பார்க்க வேண்டும். படத்தில் அந்த காட்சி சிறிய காமெடியாக இடம்பெற்றிருக்கும். அதை சீரிஸாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி பிரச்சனைக்குரிய காட்சியாக இருந்து இருந்தால், சென்சார் போர்டு அனுமதி தந்திருக்க மாட்டார்கள். எந்த ஆட்சியிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்திருப்போம். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை என்றாலும், அவர் மீது மிகுந்த எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என விளக்கம் கொடுத்து இருக்கிறார்

மாரி செல்வராஜின் மாமன்னன்
க்ரைம், திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்திற்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீதர் கூடுதல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். கண்ணை நம்பாதே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜின் முந்தைய படமான கர்ணன் மாபெரும் வெற்றி பெற்றதால் இப்படம் பெரும் சலசலப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











