கண்ணம்மா.. நடந்து, நடந்து கடைசியில பிக்பாஸ் வீட்டுக்கே வந்துட்டாங்க.. இது மரண பங்கம் டா மாப்ள!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அது தொடர்பாக வெளியான கண்ணம்மா மீம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bharathi Kannamma Venba Scene making • Vijay Tv Actress

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

பங்கேற்கும் போட்டியாளர்கள் நடனமாடி அசத்தல் என்ட்ரி கொடுப்பதை ரசிகர்கள் வீட்டில் இருந்து மட்டுமே கண்டு களிக்க முடியும்.

தெரியாத ஆளே கிடையாது

தெரியாத ஆளே கிடையாது

பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்காத தமிழ் ரசிகர்களையும், கண்ணம்மா, பல எபிசோடுகளாக நடந்துகிட்டே இருக்கா.. பாவம் புள்ளத்தாச்சி பொம்பள என பறக்கும் ட்ரோல் மீம்களால் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமாகி விட்டார். கண்ணம்மாவுக்கு வளைகாப்பு நடத்தி, பேறு காலம் பார்க்கவும் பல தாய்மார்கள் ஆயத்தமாகி விட்டனர்.

நான்காவது சீசன்

நான்காவது சீசன்

போட்டியாளர்களுக்கு கொரோனா பரவியது. பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்குமா? 80 நாட்கள் மட்டும் தான் என ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. ஆனால், அதை எல்லாம் சமாளித்து, திட்டமிட்டபடி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது. 4வது சீசன் முந்தைய சீசன்களை விட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணம்மா மீம்

கண்ணம்மா மீம்

பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா வீட்டை விட்டு பிரச்சனை காரணமாக கையில் பையை தூக்கிக் கொண்டு நிறைமாத கர்ப்பத்திலும் வெளியே கிளம்பி நடக்க ஆரம்பித்த நிலையில், சில எபிசோடுகள் அவர் நடப்பதையே காண்பித்ததை பார்த்த மீம் கிரியேட்டர்கள் கண்ணம்மாவை பல இடங்களில் வைத்து ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.

பிக்பாஸ் வீட்டிலும் கண்ணம்மா

பிக்பாஸ் வீட்டிலும் கண்ணம்மா

இந்நிலையில், தற்போது கண்ணம்மா நடந்து, நடந்து கடைசியாக பிக்பாஸ் வீட்டுக்கும் வந்துவிட்டார். இங்கே கமல் சார் மத்த போட்டியாளர்களுடன் அவரையும் 100 நாட்கள் வைத்து பார்த்துக் கொள்வார். இங்கே அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல், நல்லா இருப்பார் என்றபடி அந்த மீமை பார்த்து கமெண்ட்டுகளும் தெறிக்கின்றன.

முதல் போட்டியாளர்

முதல் போட்டியாளர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் முதல் போட்டியாளரே கண்ணம்மா தான் எனவும் கலாய்த்து அந்த மீம்களை ஷேர் செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்கிற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ லிஸ்ட் வெளியாகி விடும். இந்நிலையில், கண்ணம்மாவையும் போட்டியாளர் ஆக்குங்க என்கிற கோரிக்கைகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X