அடேங்கப்பா.. என்ன ஒரு குத்தாட்டம்.. கண்ணம்மாவும் எருமை சாணி ஹரிஜாவும்.. டிரெண்டாகும் வாடா ராசா!

சென்னை: கென் கருணாஸின் வாடா ராசா பாடலுக்கு ஏகப்பட்ட சின்னத்திரை நடிகைகளும், யூடியூப் பிரபலங்களும் நடனமாடி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குட்டி பட்டாஸ் பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அதே டீம் உருவாக்கி உள்ள வாடா ராசா பாடலும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி மற்றும் யூடியூப் பிரபலம் எருமை சாணி ஹரிஜா உள்ளிட்ட பலர் தனித்தனியே இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தி வருகின்றனர்.

தனுஷ் ரிலீஸ்

தனுஷ் ரிலீஸ்

அசுரன் படத்தில் தனது மகனாக நடித்த நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் லீடாக நடித்துள்ள வாடா ராசா ஆல்பம் பாடலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகர் கென் கருணாஸையும் இந்த பாடலை உருவாக்கிய குழுவையும் வாழ்த்தி இருந்தார்.

2 மில்லியன்

2 மில்லியன்

வாடா ராசா பாடல் வெளியான இரண்டே நாட்களில் 2 மில்லியன் பார்வைகளை அள்ளி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் கென்னுக்கு ஜோடியாக சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா நடித்து கலக்கி இருந்தார். ப்ரீத்தி ஷர்மா ரசிகர்களும் இந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

அம்மாவுடன் இணைந்து

அம்மாவுடன் இணைந்து

அம்மா கிரேஸ் கருணாஸ் உடன் இணைந்து இந்த பாடலை பாடிய கென், சாண்டி மாஸ்டரின் வேற லெவல் ஸ்டெப்களை பக்காவாக ஆடியும் அசத்தி இருக்கிறார். ஈஸ்வர் உடன் இணைந்து இந்த பாடலை எழுதியதும் கென் தான் என்பது தனிச் சிறப்பு.

இணையத்தில் டிரெண்டிங்

இணையத்தில் டிரெண்டிங்

வாடா ராசா பாடலில் இடம்பெற்றுள்ள வேட்டியை மடிச்சு கட்டிக்கோ.. கெத்தா இருக்கும் பார்த்துக்கோ.. புடவையத்தான் கட்டிக்கோ.. நல்லா இருக்கும் பாத்துக்கோ என்கிற வரிகள் இணையத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு டிரெண்டாகி வருகிறது.

கண்ணம்மா குத்தாட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவாக நடித்து வரும் சின்னத்திரை நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டு சேலை கட்டிக் கொண்டு "வேட்டி எடுத்துக் கட்டிக்கோ" பாடலுக்கு போட்டுள்ள குத்தாட்டம் செம வைரலாகி வருகிறது.

எருமை சாணி ஹரிஜா

அதே போல யூடியூப் பிரபலம் மற்றும் நடிகையான எருமை சாணி ஹரிஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரளா புடவையை கட்டிக் கொண்டு இந்த பாடலுக்கு வெறித்தனமான குத்தாட்டத்தை போட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். #vaadaraasastepu என்கிற ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

சாண்டி மாஸ்டர்

ஆல்பம் பாடல்கள் என்றாலே உடனடியாக ஸ்டெப் போட சாண்டி மாஸ்டரை கூப்பிடுங்கப்பா என்கிற குரல் தான் ஒலிக்கிறது போல.. குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ பாடல்களை தொடர்ந்து இந்த பாடலுக்கும் சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார். மேலும், அவரும் தனியாக ஒரு இன்ஸ்டா ரீலையும் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

நிஷா

சின்னத்திரை தொடர்களில் பிரபலமாக நடித்து வரும் நடிகை நிஷாவும் சேலைக்கு மேலே வேட்டியை கட்டிக் கொண்டு கூலர்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு செம பக்காவாக இந்த பாடலுக்கு நடனமாடி டிரெண்ட் செய்து வருகிறார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட பேர் இந்த பாடலுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்களை வெளியிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X