Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நயன்தாராவுடன் கண்ணம்மா செல்ஃபி.. வேற லெவலில் வைரலாகும் ரோஷ்னி ஹரிபிரியன் போட்டோஸ்!
சென்னை: நயன்தாராவுடன் கண்ணம்மா சீரியல் நடிகை எடுத்துக் கொண்ட புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றி தெரியாதவர்களை கூட, கண்ணம்மா நடையோ நடவென நடந்து அதன் மூலம் வைரலான மீம்கள் மூலம் கண்ணம்மாவை அனைவருக்கும் தெரியும்.
கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷ்னி ஹரிபிரியன் மூக்குத்தி அம்மன் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பாங்காக்ல என்னம்மா மஜா பண்றாங்க.. இரண்டாம் குத்து 'பூம் பூம்' வீடியோ பாடல் ரிலீஸ்.. செம குத்து!
கருப்பு கண்ணம்மா
கருப்பா கலையா இருக்கும் ஏகப்பட்ட பெண்கள் சினிமாவில் சாதித்துள்ளனர். சாதித்துக் கொண்டும் இருக்கின்றனர். கண்ணம்மா நடிகை ரோஷ்னியும் அதற்கு நிகழ்கால உதாரணம் தான். தற்போது டிவி சீரியல்களிலேயே கண்ணம்மா தான் டிஆர்பியில் முதலிடம் பிடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் வீட்டுக்கு
கண்ணம்மா பேக்கை தூக்கிக்கிட்டு நடையோ நடை என ஏகப்பட்ட வாரங்கள் கர்ப்பிணி வயிற்றுடன் நடந்ததை பார்த்து ஏகப்பட்ட மீம்களை மீம் கிரியேட்டர்கள் உருவாக்கி டிரெண்ட் செய்தனர். பிக் பாஸ் வீட்டுக்கு முதல் போட்டியாளராகவும் கண்ணம்மா வந்து விட்டார் என்றும், வெளிநாட்டுக்கே நடந்து சென்றார், நிலவுக்கே போய்விட்டார் என்றும் கலாய்த்துத் தள்ளினர்.
பலாத்காரத்தை எதிர்த்து
ஏகப்பட்ட போட்டோஷூட்களையும், கான்செப்ட் போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார் ரோஷ்னி. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்து, அதன் பாதிப்புகளை சமூகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆண்கள், பெண்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் பாராட்டுக்களை குவித்தன.
மூக்குத்தி அம்மனுடன்
இன்ஸ்டாகிராமில் மற்ற டிவி சீரியல் ஹீரோயின்களை போலவே இவரும் கலக்கலான போட்டோஷூட்களை போட்டு வைரலாகி வருகிறார். சமீபத்தில், தனது லேப்டாப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படம் பார்ப்பதாக பதிவிட்ட போஸ்ட் வேற லெவலில் வைரலானது.
நயன்தாராவுடன் கண்ணம்மா
இந்நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷ்னி ஹரிபிரியன் எடுத்துக் கொண்ட சூப்பரான செல்ஃபி புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.