»   »  அஜீத்தின் கண்ணாமூச்சி ரேரே.. விஜய்யின் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் வரிசையில் இனி?

அஜீத்தின் கண்ணாமூச்சி ரேரே.. விஜய்யின் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் வரிசையில் இனி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:சின்னப் பசங்க பாடுற பாட்டையெல்லாம் மாஸ் நடிகர்கள் அவங்களோட படங்கள்ல பயனபடுத்த ஆரம்பிச்சிட்டாங்க.

ஏற்கனவே தல அஜீத் தன்னோட வேதாளம் படத்தில கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாருன்னு பாட்டுப்பாடி வில்லன்களை தெறிக்க விட்டாரு.


Kannamoochi Ray Ray,Twinkle Twinkle Little Star what Next?

ஏன் தல மட்டும்தான் பாடுவாரா? நாங்கள்லாம் பாட மாட்டோமான்னு கேட்ட தளபதி தன்னோட தெறி டீசர்ல ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டைப் பாடி டீசரை அதிரடிச்சாரு.


இதனால இனிமே சின்னப் பசங்களோட பாடல்களுக்கு மவுசு அதிகரிக்கப் போகுது. அந்த வகையில இனி என்ன மாதிரியான பாட்டெல்லாம் தமிழ் சினிமாவுல இடம்பிடிக்க வாய்ப்புகள் இருக்குன்னு பார்க்கலாம்.


கண்ணா மூச்சி ரே ரே


வேதாளம் படத்தில் நடிகர் அஜீத் வில்லன்களை துவைத்துக் காயப்போடப் போகும் போது அவர்களிடம் கண்ணா மூச்சி ரே ரே என்று பாட்டுப் பாடுவார். கண்ணா மூச்சி ரேரே கண்டுபிடி யாரு என்று சிறுவயதில் நாம் பாடி ஆடியது நினைவிருக்கலாம். தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் என்று போற்றப்படும் அஜீத் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றது திரையுலகினர் மத்தியில் மாபெரும் ஆச்சரிய அலைகளை உண்டு பண்ணியது.


ஜெயம் படத்தில்


இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் ஜெயம் ரவியின் முதல்(ஜெயம்) படத்தில் கண்ணா மூச்சி ரேரே கண்டுபிடி யாரு பாடலை முக்கிய பாடலாக படக்குழுவினர் உபயோகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


ட்விங்கிள் ட்விங்கிள்


வேதாளம் வரிசையில் நேற்று வெளியாகி இணைய பூமியை கலவர பூமியாக மாற்றிய தெறி டீசரில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை படக்குழுவினர் பயன்படுத்தி இருக்கின்றனர். இதே போல வேறு எந்தப் பாடல்களை தமிழ் சினிமாவில் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று பார்க்கலாம்.


ரெயின் ரெயின் கோ அவே


மிகவும் புகழ்பெற்ற பாடலான ரெயின் ரெயின் கோ அவே பாடலை கதாநாயகி மழையில் நனைந்து கஷ்டப்படும் போது கதாநாயகன் பாடி அவரை மழையில் இருந்து காப்பாற்றலாம்.


பாபா பிளாக்ஷீப்


பெரும்பாலான படங்களில் கதாநாயகியை வயது வந்த ஓர் குழந்தை போலவே காட்டுவதால் பாபா பிளாக்ஷீப் பாடலை இசையுடன் பாடி, நாயகன் நாயகியை தூங்க வைக்கலாம்.


சப்பி சீக்ஸ்


கதாநாயகியின் அழகை மானே, தேனே என்று பாட்டுப்பாடி போரடித்துப் போன கதாநாயகன்கள் இனி சப்பி சீக்ஸ், டிம்பிள் சின் ரோஸி லிப்ஸ் என்று பாடி நாயகியை மகிழ்விக்கலாம்.


யாரு கண்டா தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எப்ப வேணாலும், எது வேணாலும் நடக்கலாம்.

English summary
After Vijay's Theri, Ajith's Vedalam next What kind of Children Rhymes use in Tamil Cinema see Some Examples.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil