Kanmani Serial: ஆளாளுக்கு தப்பிச்சு ஓடறாங்.. இதென்ன சினிமாவா?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் நம்ம சின்னவர் போலீஸ்கிட்டே இருந்து தப்பிச்சு ஓடிடறாருங்க.
தப்பிச்சு ஓட எப்படி முடியும், இதென்ன சினிமாவா, அவர் என்ன சூப்பர் ஹீரோவான்னு கேட்டாலும், கொஞ்சம் அந்த பக்கம் போயிட்டு வரேன்னு போய்த்தான் தப்பிச்சுடறார்.
கிராமத்துக்கு பெரிய குடும்பமா இருந்தாலும், போலீஸ் தன் கடமையைத்தானே செய்யணும். ஏன் செய்யலை?

அம்மா சவுந்தர்யா
கண்ணன் போலீஸ்கிட்டே இருந்து தப்பிச்சு ஒடி முத்துசெல்வியை காப்பாத்த ஏதாவது நடவடிக்கை எடுப்பார்னு பார்த்தா, அப்போதுதான் பார்த்துட்டு போன சவுண்டு நல்லாருக்காளான்னு மறுபடி ராத்திரி நேரத்துல பார்க்க வர்றாராம். அந்த நேரம் பார்த்துதான் அம்மாவும், பொண்ணும் கண்ணன் உன் மனசில இல்லையா இருக்கானான்னு பேசிக்குவாங்களாம். இந்த விஷயம் ஏற்கனவே வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும் கண்ணனைத் தவிர.

மாமாகிட்ட சொல்லிடுங்க
நான் மாமாவை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன். இதை மாமாகிட்ட சொல்லிடுங்கன்னு சவுண்டு சொல்லி, அவங்க கண்ணன் கிட்ட பேச ரெடியாகும்போதுதான், நான் முத்து செல்வியை கட்டிக்கறேன்னு வாக்கு குடுத்ததா பிரச்சனையோட கண்ணன் வர்றான். அதனால், மாமாகிட்ட யாரும் சொல்லாதீங்க.. இது என் மேல ஆணைன்னு சொல்லி எல்லார் வாயையும் சவுண்டு அடைச்சுடறா.

புதுசா இப்போது
இப்போது புதுசா சவுந்தர்யாவும்,அவங்க அம்மாவும் சேர்ந்து இந்தக் கதையை பேச,அதை கண்ணன் கேட்டு மனசில் வச்சு அல்லாடிக்கிட்டு இருக்கட்டும்னு போலீஸ்கிட்ட இருந்து கண்ணனை தப்பிக்க விட்டு இருக்காங்கப்பா... சரி, அதிருக்கட்டும், கையில் கிடைச்சா அரெஸ்ட் பண்றதை விட்டுட்டு கண்ணனை சாரி சின்னவரை ஆஸ்பத்திரிக்கு அக்கா பொண்ணை பார்க்க அழைச்சுட்டு போறாங்களாம்... டீ சாப்பிட ஜீப்பை நிறுத்தறாங்களாம்.

மாமூல் போலீஸ்
என்னதான் ஊர் பெரியவரா இருக்கட்டுமே.. சட்டம் கடமையை செய்யாதா..இப்படி உதாரணம் காமிக்கறதுனாலதான் பெரிய மனுஷ போர்வையில் பல பேர் சட்டத்தை ஏமாத்திகிட்டு தைரியமா இருக்காங்க.இதுல இன்னொன்னும் இருக்குங்க.. ஊர் பெரியவங்க அப்படின்னு சொல்லிக்கிட்டு திரியற இவங்ககிட்ட போலீஸ் மாமூல் வாங்கறதுனால வர்ற வினைதான் இது.


Click it and Unblock the Notifications











