அப்பாக்களை கிளீன் போல்டாக்கிய அஜித்தின் #KannaanaKanney: ஹிட்டு கண்டிப்பா ஹிட்டு
சென்னை: விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. புத்தாண்டு அன்று படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கண்ணான கண்ணே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
அஜித்
அப்பா, மகள் இடையேயான பாசத்தை எடுத்துக்காட்டும் கண்ணான கண்ணே பாடல் ஹிட் பாடல்களின் வரிசையில் சேர்ந்துள்ளது. என்னை அறிந்தால் படத்தில் வந்த உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடல் போன்று இதுவும் அனைத்து அப்பாக்கள், மகள்களை கவர்ந்துள்ளது.
மகிழ்ச்சி
கண்ணான கண்ணே பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பாடலை உடனே பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
புகைப்படங்கள்
கண்ணான கண்ணே பாடல் வீடியோவை யூடியூப்பில் இதுவரை 9 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ரசிகர்கள் தங்கள் வீட்டு செல்லக்குழந்தைகளின் புகைப்படங்கள, வீடியோக்களை வெளியிட்டு எங்களின் கண்ணான கண்ணே என்கிறார்கள்.
அப்டேட்
விஸ்வாசம் டீஸர் ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என்றாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் டீஸர் வெளியாகும் தேதியை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.
தோனி
கண்ணான கண்ணே தோனி வெர்ஷன் நல்லா இருக்கே


Click it and Unblock the Notifications