கண்ணப்பா டூ மிஸ்டர் ஜூ கீப்பர்.. நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களில் லிஸ்ட்!
சென்னை: கடந்த வாரம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் வெளியானது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா, பாக்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், தனுஷ் பிச்சைக்காரனாக அட்டகாசமான நடிக்கை வெளிப்படுத்தி இருந்தார். பான் இந்திய திரைப்படமான வெளியான இப்படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், தெலுங்கில் நல்ல வசூலை அள்ளி வருகிறது. குபேரா படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நாளை பலத் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது. அது என்னென்ன படம் என்பதை பார்க்கலாம்.
கண்ணப்பா: விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, அக்ஷய் குமார், சரத்குமார், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் நடித்த கண்ணப்பா திரைப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. எந்திரன் 2.O படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அக்ஷய் குமார் கண்ணப்பா படத்தில் சிவனாக நடித்துள்ளார். பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
மார்கன்: விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, தயாரித்துள்ள திரைப்படம் மார்கன். இதில், சமுத்திரக்கனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷான் அறிமுகமாகி உள்ளார். க்ரைம் த்ரில்லர் கதை அம்சத்தை கொண்ட இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

லவ் மேரேஜ்: இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் 'லவ் மேரேஜ்' திரைப்படம் நாளை தியேட்டரில் வெளியாகி உள்ளது. மீனாட்சி தினேஷ், அருள் தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம், கஜராஜ், கோடாங்கி வடிவேலு, வெற்றியாளர் ராமச்சந்திரன், யாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 27ஆம் தேதியான நாளை தியேட்டரில் வெளியாகி உள்ளது.
'மிஸ்டர் ஜூ கீப்பர்' : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த விஜய் டிவி புகழ், நடித்து இருக்கும் திரைப்படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்' இந்த படத்தை ஜே.சுரேஷ் இயக்கியிருக்கிறார். நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் இருந்த இத்திரைப்படம் வரும் ஜூலை 27ஆம் தேதியான நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்தை ஜே 4 ஸ்டுடியோஸ் ராஜ ரத்தினம் தயாரித்துள்ளார். இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளனர். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திருக்குறள்: திருவள்ளுவர் வாழ்க்கையின் ஒரு பகுதியை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். மேலும் இப்படத்தில், சுப்பிரமணிய சிவா, ஓ.ஏ.கே.சுந்தர், சுகன்யா, சந்துரு, கொட்டாச்சி, கார்த்தி, ஹரிதாஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வெள்ளிக்கிழமையான நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.
இரவுப்பறவை: வேதாஜி பாண்டியன் கதை எழுதி, இயக்கி உள்ள திரைப்படம் தான் இரவுப்பறவை. இந்தப் படத்தில் சத்யா, இலங்கையைச் சேர்ந்த நந்தினி, நிழல்கள் ரவி, ஆர்.பாண்டியன், செல்வகுமாரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆல்வின் கலைபாரதி பாடல்களை எழுதி, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 27ஆம் தேதி உலகெங்கும் தியேட்டரில் வெளியாக உள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த ஒரு பெண் போராட்டம் நடத்தி, இந்திய குடியுரிமையைப் பெறுவதும், அதற்காக அந்த பெண் படும் வேதனை தான் இந்த படத்தின் கதை.


Click it and Unblock the Notifications