கண்ணப்பா, மார்கன், லவ் மேரேஜ், F1.. பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் எப்படி இருக்கு? ஏதாவது தேறுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதங்கள் 128 படங்களுக்கு மேல் வெளியாகி விட்டன. அதில், அதிகபட்சம் 5 முதல் 10 படங்கள் மட்டுமே ஓரளவுக்கு வசூல் ரீதியாக வெற்றிப் பெற்ற படங்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 100 படங்களுக்கும் மேல் பலத்த அடியை பாக்ஸ் ஆபீஸில் மட்டுமின்றி நான் தியேட்டரிக்கலாகவும் செம அடி வாங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

பல நூறு கோடி கொட்டிப் படம் எடுத்தாலும், ரசிகர்கள் படத்தை பார்க்க பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில், பல முன்னணி நடிகர்களும் குறைவான பட்ஜெட்டில் படமெடுத்து வெற்றியை பெற என்ன செய்யலாம் என்பதை மட்டுமே யோசித்து வருகின்றனர்.

Kannappa Maargan Love Marriage and F1 last week release movies Box Office Report
Photo Credit:

இந்நிலையில், கடந்த வாரம் வெளியான கண்ணப்பா, மார்கன், லவ் மேரேஜ், F1 உள்ளிட்ட படங்கள் எந்தளவுக்கு வசூல் செய்துள்ளன என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

கண்ணப்பா 5 நாள் வசூல்: கடந்த வாரம் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் வெளியான கண்ணப்பா திரைப்படம் இதுவரை வெறும் 27.45 கோடி ரூபாய் வசூலை தான் கடந்த 5 நாட்களில் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதிலும், விஷ்ணு மஞ்சுவுடன் இணைந்து அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன்பாபு, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ஐஸ்வர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த கண்ணப்பா திரைப்படம் 1 கோடி கூட இதுவரை வசூல் செய்யவில்லை என்பது தான் திரையுலகிற்கே பேரதிர்ச்சியை தந்திருக்கிறது. தெலுங்கு வெர்ஷனில் மட்டும் தான் 23 கோடி ரூபாய் வரை வசூல் வந்துள்ளது. இந்தி மற்றும் மலையாளத்தில் சேர்த்து ஒரு 3 கோடி ரூபாய் வரை வந்திருப்பதாக கூறுகின்றனர். தியேட்டர் வசூலே இவ்வளவு குறைவு என்றால் அதில், தயாரிப்பாளருக்கு கிடைக்கும் 40 சதவீத ஷேர் எவ்வளவு இருக்கும் என்றும் கேள்விகள் எழத்தான் செய்கின்றன. செவ்வாய்க்கிழமையான நேற்று ஒட்டுமொத்தமாக இந்தியளவில் வெறும் 1.75 கோடி மட்டுமே இந்த படம் வசூல் செய்துள்ளது. 2வது வாரத்தில் படம் ஓடினாலும், அதிகபட்சமாக 35 கோடி முதல் 40 கோடி வசூல் வருவதே சிரமம் தான் என்கின்றனர்.

Kannappa Maargan Love Marriage and F1 last week release movies Box Office Report
Photo Credit:

மார்கன் 5 நாள் வசூல்: விஜய் ஆண்டனி, பிரகிடா சாகா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மார்கன் படத்திற்கு பெரிய ஓபனிங் அமையவில்லை. வெறும் 85 லட்சம் மட்டுமே வசூல் ஈட்டியது. ஆனால், படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் மவுத் டாக் மூலமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரித்தது. இதுவரை 5 நாட்களில் ஒட்டுமொத்தமாக 5.98 கோடி சுமார் 6 கோடியளவுக்கு இந்த படம் வசூல் செய்துள்ளது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தியேட்டரிக்கல் வசூலே 10 கோடியை தாண்டும் என்கின்றனர். இந்த படம் நான் தியேட்டரிக்கல் பிசினஸ் உடன் சேர்ந்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

Kannappa Maargan Love Marriage and F1 last week release movies Box Office Report
Photo Credit:

லவ் மேரேஜ் வசூல் எப்படி?: சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் நடிப்பில் கடந்த வாரம் வெளியான லவ் மேரேஜ் திரைப்படம் 5 நாட்களை கடந்தும் இதுவரை 1 கோடி ரூபாய் வசூலை கூட தொடவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 5 நாட்களில் 98 லட்சம் மட்டுமே வசூல் வந்திருக்கிறது. இந்த முறையும் விக்ரம் பிரபுவுக்கு பலத்த அடிதான்.

Kannappa Maargan Love Marriage and F1 last week release movies Box Office Report
Photo Credit:

வசூலில் வேகமெடுத்த F1: பிராட் பிட் நடிப்பில் வெளியான F1 திரைப்படம் தான் இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் கொடிகட்டி பறக்கிறது. இந்தியாவிலேயே இந்த படம் 5 நாட்களில் 28.50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறது. மிஷன் இம்பாசிபிள் படத்தை போல இந்த படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்தியாவில் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் இதுவரை இந்த படம் 1250 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X