Kannappa: கண்ணப்பாவில் பிரபாஸ் லுக்கை லீக் செய்தது யாருனு சொன்னால் ரூ.5 லட்சம் - படக்குழு அறிவிப்பு

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் முகமாக மாறியுள்ளார். இவரது நடிப்பில் ஒரு படம் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கூடி விடுகின்றது.கிட்டத்தட்ட அடுத்த 8 ஆண்டுகளுக்கான படங்கள் இவரது கையில் இருப்பதாக கூறப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்னர் கூட இவரது நடிப்பில் வெளியான சலார் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்தது. மொத்தம் மூன்று படங்களில் ஹம்பாலே நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இப்படியான நிலையில் இவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள கண்ணப்பா படத்தில் இவரது லுக்கினை யாரோ இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது வேகமாக பரவியது. இந்நிலையில் படக்குழு இணையத்தில் பிரபாஸ் லுக்கினை வெளியிட்டவர்களை பிடித்துத் தருபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கூறியதைப்போல் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்குப் பின்னர் இந்தியா சினிமாவின் முகமாக மாறிவிட்டார். தனது வசூல் சாதனைகளை தானே அடுத்தடுத்த படங்களில் முறியடித்தும் வருகின்றார். தனது ஆரம்பகால சினிமாவில் காதல் படங்களில் நடித்து வந்த பிரபாஸ் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்‌ஷன் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து தன்னை ஒரு முழுமையாக ஆக்‌ஷன் கதாநாயாகனாக மாற்றினார். இவரது 15வது படமான ரிபெல் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால், ரிபெல் ஸ்டார் என அழைக்கப்படுகின்றார்.

kannappa prabhas

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படம் கிட்டத்தட்ட 600 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இப்படம் வசூல் ரீதியாக 1200 கோடிகளைக் கடந்து வசூலித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு அல்லது 2026ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்ணப்பா: இந்த அளவுக்கு பிஸியான நடிகராக வலம் வரும் பிரபாஸ், கண்ணப்பா படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் விஷ்ணு மன்சு கதாநாயகனாக நடிக்கின்றார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. இந்நிலையில் நேற்று அதாவது நவம்பர் 8ஆம் தேதி படத்தில் இருந்து சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. குறிப்பாக கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸின் லுக் வெளியானது.

லீக்: இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது படத்தின் தயாரிப்பு நிறுவனமான, 24 ஃபிரேம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக எங்களின் எண்ணத்தையும் செயலையும் செலவழித்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தினை உருவாக்க கடுமையாக உழைத்து வருகின்றோம்.

5 லட்சம்: இப்படியான நிலையில், யாரோ செய்த வேலை எங்கள் அனைவரின் மனதையும் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இணையத்தில் வெளியான காட்சிகளைப் பார்த்து எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இணையத்தில் கண்ணப்பா படம் தொடர்பான காட்சிகளை யாரும் பகிரவேண்டாம். அவ்வாறு பகிர்ந்தால் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும். மேலும் இதனை யார் திருடி வெளியிட்டார்கள் எனத் தெரிவிப்போருக்கு ரூபாய் 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X