கண்ணப்பாவை காலி பண்ண நினைச்சா அவ்ளோதான்.. விமர்சகர்கள், பொதுமக்களுக்கு படக்குழு வார்னிங்!

ஹைதராபாத்: முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் மோகன் பாபு தயாரித்து அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கண்ணப்பா திரைப்படம் நாளை ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், திடீரென Public Caution Notice ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் பான் இந்தியா நடிகர்கள் நடித்து வருவதை போல விஷ்ணு மஞ்சு நடித்துள்ள கண்ணப்பா படத்திலும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அக்‌ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ், சரத்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Kannappa movie team released a public caution notice to reviewers and fans
Photo Credit:

பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவித்தால் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் படத்தை பார்த்து பாராட்ட அனைவருக்கும் அனுமதி உண்டு என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

சினிமாவை காலி செய்கிறதா விமர்சனங்கள்?: சினிமா விமர்சனங்களை பெரிய மீடியாக்கள் மட்டுமே சொல்லி வந்த நிலையில், சோஷியல் மீடியா உலகத்தில் பல யூடியூபர்கள் புதுப்படங்களை பார்த்து விமர்சனங்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதில், யார் சூப்பராகவும் சரியாகவும் ரசிகர்களை கவரும்படி சொல்கிறார்களோ அவர்களது விமர்சனங்களை பார்த்துவிட்டு படத்துக்குச் செல்லலாம் என ஒரு கூட்டம் முடிவு செய்கிறது. இந்த படம் நல்ல படம் போய் பாருங்கள் எனக் கூறும் விமர்சகர்கள், இந்த படங்கள் எல்லாம் ரொம்ப வொர்ஸ்ட் உங்களோட 200 ரூபாயை சேவ் பண்ணிக்கோங்க என்றும் சொல்ல ஆரம்பித்த நிலையில் தான் பல தயாரிப்பாளர்களுக்கு விமர்சகர்கள் மீது கோபம் கிளம்ப ஆரம்பித்தது.

பப்ளிக் ரிவ்யூவுக்கும் தடை: சமீபத்தில், நடைபெற்ற நீயா நானா டிபேட் ஷோவில் இதை ஒரு டாபிக்காக எடுத்துக் கொண்டும் பேசியிருந்தனர். சினிமாவில் இருந்துக் கொண்டே சினிமாவை விமர்சகர்கள் அழிப்பதாக படக்குழுவினர் குற்றம்சாட்ட, நல்ல படங்களை எடுத்தால் நாங்கள் ஏன் தவறாக விமர்சிக்கப் போகிறோம் என்றும் விமர்சனத்தால் ஒரு படம் ஓடுவதோ, லாஸ் ஆவதோ கிடையாது என்றும் இன்றைக்கு விமர்சகர்களை தாண்டி பொதுமக்களே படத்தை பார்க்கும் போதே ட்வீட் போட்டு விடுகின்றனர் என்றும் கூறி வருகின்றனர். கங்குவா படத்தின் பப்ளிக் விமர்சனத்திற்கு பிறகு பப்ளிக் ரிவ்யூவுக்கு தடை விதிக்கப் போவதாக தியேட்டர் ஓனர்கள் கூறினர். ஆனால், தொடர்ந்து பப்ளிக் விமர்சனங்கள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

கண்ணப்பா படக்குழு எச்சரிக்கை: மோகன் பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணப்பா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தை ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து பாராட்டலாம். கடுமையான உழைப்பை கொண்டாடலாம். ஆனால், கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு மீடியாவோ படத்தின் பிசினஸை காலி செய்யும் நோக்கில் கடுமையான விமர்சனங்களையோ, வெறும் வன்மத்தை பரப்பி படத்தை காலி செய்ய நினைத்தாலோ அனைவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் அதற்கு நீதிமன்றமும் முழு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகவும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மொபைலில் வீடியோ எடுத்தாலும் ஆப்பு: அதே போல கண்ணப்பா படத்தின் காட்சிகளை பகுதியாகவோ, அல்லது முழுமையாகவோ திருட்டு பிரின்ட்டாக சோஷியல் மீடியா அல்லது பைரசி சைட் என எதில் விட்டாலும், அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளனர். புதிய படங்கள் வெளியானாலே ரசிகர்கள் மற்றும் அந்த நடிகருக்கு வேண்டாத ஹேட்டர்கள் படத்தின் ஓபனிங் சீன் முதல் கடைசி காட்சி வரை மொபைலில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருவதால் தான் பல படங்களின் வசூல் பாதிப்படைவதாகவும் படத்தை தயாரித்துள்ள 24 ஃபிரேம்ஸ் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X