Kannappa X Review: கண்ணப்பாவாகவே வாழ்ந்த விஷ்ணு மஞ்சு.. பிரபாஸ் சீனெல்லாம் பட்டாஸ்.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: மகாபாரதம் சீரியல் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரம்மாண்ட தொலைக்காட்சி தொடர்களில் எல்லாம் பணியாற்றிய இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதையின் நாயகனாக நடித்துள்ள கண்ணப்பா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ஏகப்பட்ட தடைகளை கடந்து இந்த பிரம்மாண்ட படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கண்ணப்பா படத்தை பார்த்துவிட்டு பிரம்மிப்பாக உள்ளது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது முதல் விமர்சனத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில், இன்று வெளியான படத்தை பார்த்துவிட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் படத்துக்கு என்ன மாதிரியான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர் என்பதை இந்த ட்விட்டர் விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

Kannappa Twitter Review and Fans Reactions are getting positive and all praises Prabhas cameo
Photo Credit:

விஷ்ணு மஞ்சு, அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட கண்ணப்பா திரைப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்குமா என்பது இன்று அந்த படத்துக்கு ரசிகர்கள் தரும் ஆதரவை பொறுத்து உள்ளது.

கண்ணப்பாவாகவே வாழ்ந்த விஷ்ணு மஞ்சு: காலஹஸ்தி கோயிலுக்குச் சென்றால் கண்ணப்பர் கோயிலுக்கும் பக்தர்கள் சென்று வருவது வழக்கம். வேடர் குலத்தை சார்ந்த கண்ணப்பா சிவலிங்கத்தின் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்து தனது கண்களை பிடுங்கி லிங்கத்துக்கு வைத்து தன்னுடைய மகத்தான பக்தியை வெளிப்படுத்தும் புராண கதை பலருக்கும் தெரிந்திருக்கும். அதை திரையில் பிரம்மாண்டமாக கொடுக்க வேண்டும் என்கிற பெருமுயற்சியில் வெற்றி கண்டுள்ள விஷ்ணு மஞ்சு படத்தில் கண்ணப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்றும் அதிலும் அந்த கிளைமேக்ஸ் காட்சியில் தனது கண்களை அம்பு வைத்து பிடுங்கி எடுக்கும் காட்சியெல்லாம் அல்டிமேட் என படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

பிரபாஸ் வரும் சீனெல்லாம் பட்டாஸ்: கண்ணப்பா படத்தில் சிவனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோவாக நடித்துள்ளார். காஜல் அகர்வால் பார்வதி தேவியாக நடித்துள்ளார். ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் சிவனின் திருவிளையாடலுக்காக கண்ணப்பாவை சோதிக்க அனுப்பப்படும் நபராக பிரபாஸ் வரும் 20 நிமிட கேமியோ காட்சிகளும் படத்துக்கு பெரும் பலமாக உள்ளது என்றும் பட்டாஸாக உள்ளது என்றும் பிரபாஸ் ரசிகர்கள் கண்ணப்பா படத்துக்கு ட்விட்டரில் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

பக்தி படம்: தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து ஹனுமான், ராமர், சிவன் என ஏகப்பட்ட கடவுள்களை பற்றிய பிரம்மாண்ட பக்திப் படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் கண்ணப்பா படமும் சிறந்த பக்தி படமாக உள்ளதாக இந்த நெட்டிசன் தனது ட்விட்டர் விமர்சனத்தை கொடுத்துள்ளார். படத்துக்கு 3 மற்றும் 3.5 உள்ளிட்ட ரேட்டிங்குகளை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொடுத்து வருகின்றனர்.

சிஜி குறைகள்: பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு பெரிய சவாலே சிஜி காட்சிகளை ஹாலிவுட் தரத்துக்கு எடுத்து விட வேண்டும் என்பது தான். அதற்காகவே பல ஹாலிவுட் நிறுவனங்களுடன் பல படங்கள் பணியாற்றி வருகின்றன. கண்ணப்பா படத்தில் சில இடங்களில் சிஜி குறைகள் உள்ளதாக இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சிறு சிறு குறைகள் பெரிதாக தெரியாது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குபேரா படம் தனுஷுக்கு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படமாக மாறிய நிலையில், கண்ணப்பா திரைப்படம் இந்த வாரம் டோலிவுட்டுக்கு மீண்டுமொரு பாக்ஸ் ஆபீஸ் படமாக மாறுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X