Kannappa Box Office Day 3: ஞாயிற்றுக்கிழமை கூட அதிகரிக்காத வசூல்.. கங்குவா நிலைமை தான் கண்ணப்பாவுக்கும்?

சென்னை: பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்து விட்டாலே பிரபாஸ் மாதிரி ஹீரோவாக ஆகிவிடலாம் என சில நடிகர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால், ரசிகர்களும் பொது மக்களும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்கள் பான் இந்தியா சூப்பர் ஸ்டார்களாக ஆக முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

நடிகர் சூர்யா 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கங்குவா படத்தை எடுத்துவிட்டு அந்த படம் ஒட்டுமொத்தமாகவே 100 கோடிக்கும் குறைவான வசூலை மட்டுமே ஈட்டியது படக்குழுவை பயங்கர நஷ்டத்தில் ஆழ்த்தியது. மேலும், அதிகப்படியான ட்ரோல்களும் நெகட்டிவிட்டிகளையும் அந்த படம் சந்தித்தது.

Kannappa vs Kanguva Why these movies not worked well at Box Office and Kannappa Day 3 Collection
Photo Credit:

ஆனால், கண்ணப்பா படத்துக்கு அந்தளவுக்கு ட்ரோல்கள் இல்லை என்றாலும், படக்குழு வெளியிட்ட வார்னிங் மெசேஜ் படத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டதா? என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. இதுவரை 3 நாட்களில் கண்ணப்பா திரைப்படம் இத்தனை பான் இந்தியா நடிகர்கள் இருந்தும் பிரகாசிக்க முடியாதது ஏன் என்பது குறித்து இங்கே லேசாக அலசுவோம் வாருங்கள்..

கங்குவா லைஃப் டைம் வசூல்: ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் 300 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம் அதிகபட்சமாக இந்தியாவில் gross ஆக 84.06 கோடி ரூபாயும் ஓவர்சீஸில் 24.14 கோடி என ஒட்டுமொத்தமாக 107.20 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. கிட்டத்தட்ட 150 முதல் 200 கோடி வரை படத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

Kannappa vs Kanguva Why these movies not worked well at Box Office and Kannappa Day 3 Collection
Photo Credit:

கண்ணப்பா 3 நாள் வசூல்: முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் மோகன் பாபு தயாரித்து அவரது மகன் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்த கண்ணப்பா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் கண்ணப்பா திரைப்படம் இந்தியளவில் அதிகபட்சமாக 9.35 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், சனிக்கிழமை 7.15 கோடி ரூபாய் வசூலும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இதுவரை கிடைத்த தகவலின் படி அதிகபட்சமாக 7.25 கோடி ரூபாய் மட்டுமே கண்ணப்பா திரைப்படம் வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் 23.75 கோடி ரூபாய் வசூலை மட்டுமே கண்ணப்பா திரைப்படம் பெற்றுள்ளது. 150 முதல் 200 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 40 கோடி ரூபாய் கூட இந்த படம் லைஃப் டைம் வசூல் செய்யுமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர்.

Take a Poll

என்ன காரணம்? தெலுங்கில் 2வது வாரமும் குபேரா படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், கண்ணப்பா படத்தில் பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால் என ஏகப்பட்ட கேமியோக்கள் வந்தாலும் ரசிகர்களை பெருமளவில் தியேட்டர்களை நோக்கி கொண்டு வர முடியவில்லை. மாதக் கடைசியில் படம் வெளியானதும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர். மேலும், கண்ணப்பா படத்தின் முதல் பாதி முழுவதுமே பக்திப் படமாக இல்லாமல் கங்குவா படத்தை போலவே காட்சிகள் இருந்த நிலையில், பக்திப் படம் என எதிர்பார்த்த ரசிகர்களையும் முதல் பாதி ஏமாற்றி விட்டதாக கூறுகின்றனர். படத்தை பொறுத்தவரையில் விமர்சன ரீதியாக பாஸ் ஆனாலும், மக்கள் கண்ணப்பா படத்தை பார்த்தே ஆகவேண்டும் என பெருவாரியாக நினைக்காதது தான் இந்த படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்திக்க காரணம் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருதுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X