Kannappaa OTT Reaction: கண்ணப்பா சாமி படமா..ப்ரீத்தி மட்டும் இல்லையினா.. இணையத்தில் புலம்பிய ரசிகர்!

சென்னை: இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி, கடந்த ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கண்ணப்பா. இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் லால், அக்‌ஷய் குமார், ப்ரீத்தி முகுந்தன், பிரபாஸ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வெளியாகி வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் படம் டெக்னிக்கலாக மிகவும் சிறப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்தார்கள். அதிலும் குறிப்பாக, படத்தை நன்றாக செலவு செய்து எடுத்துள்ளார்கள். படம் திரையில் பார்க்க நன்றாக உள்ளது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கண்ணப்பா ஏற்ற படமாக இருக்கும் என தெரிவித்தார்கள்.

இந்நிலையில் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று முதல் அதாவது ஜூலை 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்நிலையில் ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்த சினிமா ரசிகர் ஒருவர் தனது விமர்சனத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும் படத்தில் மிகவும் ரசிக்கும்படியாக இருப்பதே ப்ரீத்தி முகுந்தனின் கிளாமர் காட்சிகள் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Kannappaa OTT Reaction Netizens Trolls Kannappa Preity Mukhundhan Glamour Scenes Saves Them
Photo Credit:

ப்ரீத்தி முகுந்தன் கிளாமர்: அவரது எக்ஸ் பதிவில், " கடவுளே ஒருத்தனை பிடிச்சு அவனுக்குள்ள கடவுள் நம்பிக்கைய வர வைக்கிறது தான் இந்த படம். அப்போ இது சாமி படமான்னு கேட்டா... ஆமா.. அதுக்காண்டி வீட்டில் இருக்க குட்டி குழந்தைகள் எல்லாம் கூப்பிட்டு குடும்பத்தோட உக்காந்து பார்த்தா.. அவனுங்களுக்கு பக்தி கிடைக்கும்., உங்களுக்கு செருப்படி கிடைக்கும். பிளாக் போர்டை சாக்பீஸ் தடவுற மாதிரி படம் முழுக்க தடவிட்டே இருக்காரு ஹீரோ. பாயிண்ட் வரட்டும்-ன்ற Mode -ல சிவபெருமான் பார்வதி கூட தாயபாஸ் ஆடின்னே இதை பார்த்தின்னு இருக்காரு.

கடவுள் நம்பிக்கை: முன்னொரு ஜென்மத்துல மோகன்லாலா பிறந்த சிவன் கிட்ட., மகாபாரத அர்ஜுனன் வரம் கேட்க. இன்னொரு ஜென்மத்துல அக்சய் குமாரா பிறந்த சிவன்., தின்னாவா பொறந்த அர்ஜுனனுக்கு., அந்த வரத்தை கொடுத்து கண்ணப்பாவா ஆக்குறாரு. இந்த மிகப்பெரிய Mission ah Complete பண்ண. Beast வீரராகவன் மாதிரி பிரபாஸ் ஐயா சாமியார் கெட்டப்ல வர்றாரு. பிறவியிலேயே ஊமையா இருக்கவங்களுக்கு., பாஸ்டர்... கர்த்தர் கிட்ட ஜெபம் பண்ணி., 68 வது வயசுல பேச வைக்கிற மாதிரி... பிரபாஸ் Speech கேட்டு கடவுள் நம்பிக்கை வந்துடுது நம்ம ஹீரோவுக்கு.

Kannappaa OTT Reaction Netizens Trolls Kannappa Preity Mukhundhan Glamour Scenes Saves Them
Photo Credit:

5 நிமிசம் ஆகாது: அடுத்து இவனுங்க எந்த Duet க்கும் போக மாட்டானுங்களேன்னு எனக்கு கவலை. ஏன்னா அடுத்து இன்னும் 20 நிமிஷம் கிட்ட படம் இருக்கு. ப்ரீத்தி தான் உசுரு குடுத்து இவனுங்க கிட்ட இருந்து காப்பாத்தி Climax வரைக்கும் கூட்டின்னு வந்துச்சு. அடுத்து ப்ரீத்திய காட்ட மாட்டானுங்களேன்னு கவலை. படத்துல சிவபெருமானுக்கு தன்னோட கண்ணை., தோண்டி குடுத்த கண்ணப்பன் மாதிரி., எனக்கும் என்னோட கண்ணை தோண்டி., இந்த படத்தோட ரைட்டர் பயலுக்கு குடுக்கணும்னு தோணுச்சு. இந்த கண்ணப்பா கதைய முழுசா சொன்னா அஞ்சு நிமிஷம் கூட ஆகாதுடா. மூனு மணி நேரம்" என படத்தை நக்கலாக விமர்சித்து பதிவிட்டுள்ளார் அந்த ரசிகர். Just Cinema என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் இருக்கும் இந்த ரசிகரின் விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X