சர்வதேச திரைப்பட விழா.. மூன்று விருதுகளை தட்டித்தூக்கிய கண்ணே கலைமானே!

சென்னை: சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Kanne Kalaimaane movie won three awards at the Indo French International Film Festival 2023

தர்மதுரை படத்திற்கு பிறகு சீனுராமசாமி இயக்கிய திரைப்படம் என்பதால், இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

கண்ணே கலைமானே: இயற்கை விவசாயம், மண்புழு உரம், எளியவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்டவராக கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். வங்கி மேலாளர் பாரதி என்ற கதாபாத்திரத்தில் ஆடம்பரமே இல்லாமல் தமன்னா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை என்றாலும், கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

Kanne Kalaimaane movie won three awards at the Indo French International Film Festival 2023

சிறந்த நடிகை தமன்னா: இந்நிலையில், இந்தோ-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே படம் மூன்று விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது நடிகை தமன்னாவுக்கும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருது உதயநிதிக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்துள்ளது.

குவியும் வாழ்த்து: மொத்தத்தில் உதயநிதி தயாரித்து நடித்த கண்ணே கலைமானே படம் இந்தோ பிரெஞ்சு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை தட்டித்தூக்கி உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் உதயநிதி, தமன்னா, சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Kanne Kalaimaane movie won three awards at the Indo French International Film Festival 2023

இதயப்பூர்வமான நன்றிகள்:இந்நிலையில், சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், தங்களின் சினிமாத்துறை விடைபெறுதலுக்கு எப்படி வாழ்த்து தெரிவிப்பது எனத் தெரியவில்லை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே என்று இன்றும் நாட்டுக்குள் இருக்கும் வீட்டுமக்களாலும், புதிய தலைமுறை இளைஞர்களாலும் கவனிக்கப்படும் திரைப்படங்களை இயக்க வாய்ப்புகள் தந்து, என் இனிய நினைவுகளுக்கு அன்பும் தந்த தங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X