twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதி ஸ்டாலினின் படத்திற்கு விருது.. ஹேப்பி மோடில் படக்குழு!

    |

    சென்னை: உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்திற்கு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட உள்ளதாக படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

    மதுரையை சேர்ந்தவர் சீனு ராமசாமி. ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக இருந்த பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சீனுராமசாமி, கூடல் நகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

    இவரது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை குவித்தது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களும் பெரிதும் பேசப்பட்டன.

    பெரும் வரவேற்பு

    பெரும் வரவேற்பு

    இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    உதயநிதி ஸ்டாலின் விவசாயி

    உதயநிதி ஸ்டாலின் விவசாயி

    இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாகவும் தமன்னா வங்கி அதிகாரியாகவும் நடித்திருந்தனர்.

    கல்ட் திரைப்பட விழா

    கல்ட் திரைப்பட விழா

    இந்த படம் ஏற்கனவே பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது என அப்படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் ஒரு விருது

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது என கூறியுள்ளார்.

    English summary
    Udhayanithy stalin's Kanne Kalaimane movie getting award Calcutta International cult film festival Seenu Ramasamy has tweeted.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X