கண்ணே கலைமானே படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்... என்ன செய்யப்போகிறார் தயாரிப்பாளர் உதயநிதி
கண்ணே கலைமானே படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை: சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. நேற்று ரிலீசான திரைப்படம் இந்த வாரம் வெளியானது.

சீனி ராமசாமியின் முந்தைய படங்களைப் போல் இல்லையென்ற குறை இருந்தாலும், படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் இந்தப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத் தனமாக வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், தற்போது கண்ணே கலைமானே படத்தையும் வெளியிட்டிருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications