திரையரங்கில் திடீர் விசிட்.. கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய கன்னி மாடம் டீம் !

சென்னை : ஏ.வி.எம். திரையரங்கில் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த கன்னிமாடம் படக்குழுவினர் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.

Recommended Video

Kanni Maadam Must Watch Movie - Director Metti oli Boss Venkat

நடிகர் போஸ் வெங்கட் இயக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் கன்னிமாடம். இந்த படம் பிப்ரவரி 21 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் ஶ்ரீராம் கார்த்திக், சயா தேவி, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். படத்திற்கு ஹரி சாய் இசையமைத்து இருக்கிறார் .

kanni maadam film Success, Cake Cutting Celebration in theatre

படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் சென்னையில் உள்ள ஏவிஎம் திரையரங்கில் திரையிடபட்டிருந்த நேரத்தில் படக்குழுவினர் திரையரங்கிற்கு சென்று ஆச்சரியம் அளித்தனர்.

kanni maadam film Success, Cake Cutting Celebration in theatre

இதே நேரத்தில் அங்கு வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி வெற்றியை பகிர்ந்து கொண்டனர். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் வெற்றிமாலை அணிவிக்கப்பட்டது. அப்போது படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்களும் படம் மிகவும் தாக்கம் மிகுந்ததாக இருக்கிறது அனைவரும் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தனர். மேலும் படத்திற்கு இன்னும் அதிகபடியான திரையரங்குகள் தரப்பட வேண்டும் அதிகமான மக்களை சென்றடைய வேண்டும் என்றும் கூறினார் .

kanni maadam film Success, Cake Cutting Celebration in theatre

கன்னி மாடம் படத்தின் நாயகன் ஶ்ரீராம் கார்த்திக் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். படக்குழுவை சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தனர். பலரும் இந்த வெற்றியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றே கூறினர் .

மேலும் இயக்குனர் போஸ் வெங்கட் நான் நடிகனாக பல வெற்றிகளை கண்டுவிட்டேன் இயக்குனராக முதல் வெற்றி மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். இந்த வெற்றியை பரிசளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

பலரும் கன்னிமாடம் படத்தை பற்றிய பாசிடிவ்வான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இணையத்திலும் படம் வெகுவாக பலரால் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படக்குழு யூடியூப்பின் பெரிய விமர்சகர்கள் யாரும் படத்தை பற்றி பேசாதது வருத்தும் அளிக்கிறது என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X