இன்று வெளியான படங்களில்.. கன்னிமாடம் தான் பெஸ்ட்.. ரசிகர்கள் கருத்து!
Recommended Video
சென்னை : இன்று வெளியான மூன்று படங்களில் கன்னிமாடம் படம் தான் பெஸ்ட் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அருண்விஜய் நடிப்பில் மாஃபியா படமும் , நட்டி நடிப்பில் காட் ஃபாதர் படமும் மற்றும் நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னிமாடம் படமும் வெளியாகியுள்ளது. இந்த மூன்று படங்களுமே பெரிய அளவில் எதிர்பார்க்கபட்ட படங்கள் .

கார்த்திக் நரேன் இயக்கிய மூன்றாவது படம் தான் மாஃபியா. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இருந்தும் பல ரசிகர்கள் கூறுவது எதிர்பார்த்த அளவில் இல்லை என்பது தான். துருவங்கள் பதினாரு பெரிய வெற்றி அடைந்த காரணத்தால் இவரின் அடுத்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தார்கள் ஆனால் நரகாசூரன் தயாரிப்பு ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்ட காரணமாக மாஃபியா வெளியீட்டுக்கு முந்திக் கொண்டது .

காட்ஃபாதர் படம் நட்டி நாயகனாக நடித்திருக்கும் படம். இந்த படத்தை ஜகன் ராஜசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருந்ததால். இந்த படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கபட்டது . இந்த படத்தில் நாயகனாக நட்டியும் வில்லனாக லாலும் நடித்திருக்கின்றனர். இவர்களுக்கிடையே இருக்கும் பிரச்சினைகள் தான் காட் ஃபாதர் கதை. சில ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது என்றும் சில ரசிகர்கள் நன்றாக இல்லை என்றும் கூறினார்கள். ஒரு கலவையான விமர்சனத்தை படம் பெற்றிருக்கிறது .

கடைசியாக யாரும் எதிர்பாராமல் ஒரு குறுகிய பட்ஜெட்டில் உருவாகி நடிகர் போஸ் இயக்கி ரசிகர்களிடயை நல்ல ஆதரவை பெற்றிருக்கிறது கன்னி மாடம் படம் . ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வியல் பிரச்சினை, சமூக பிரச்சனைகள் பலவற்றையும் கையில் எடுத்து களமாடியிருக்கும் படமே கன்னி மாடம் . இயல்பான காட்சிகளுடன் கசப்பான உண்மையும் சரியான அளவில் கலந்து அதனுடன் சிறப்பான காதலையும் தெகட்டாமல் கொடுத்து இருக்கிறது கன்னி மாடம் படம் .
நடிகர் போஸ் இயக்கியுள்ள முதல் படமே நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது. படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்பதால் பெரிய ஓபனிங் இல்லை இருப்பினும் வரும் நாட்களில் அதிகபடியான திரையரங்குகள் கன்னி மாடம் படத்திற்கு கிடைத்து பெரிய வெற்றியையும் வசூலையும் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இன்று மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது .மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தனியாக கன்னி மாடம் படம் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது .


Click it and Unblock the Notifications











